44,000 மாணவர்கள் பயனடைவர்

உணவுக்கான நிதியுதவி அதிகரிப்பு

உதவி தேவைப்­படும் தொடக்­க­நிலை, உயர்­நிலைப் பள்ளி மாணவர்­ க­ளுக்கு போக்­கு­வ­ரவு, மதிய உணவுக்கான நிதி உதவி மற்­றும் பல்­க­லைக் கழ­கத்­துக்கு புதுமுக வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவி நிதியை அர­சாங்­கம் அதி­ க­ரித்­துள்­ளது. இத­னால் 44,000 பள்ளி மாண­வர்­கள் பய­ன­டை­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கல்வி அமைச்­சின் நிதி உதவி திட்­டத்­தின் கீழ் இச்­ச­லுகை வழங்­கப்­ப­டு­கிறது.

அதி­க­ரிக்­கப்­பட்ட சலு­கை­களில் ஒன்று, தொடக்­கப்­பள்­ளி­களில் வாரம் மொத்­தம் ஏழு வேளை உண­வுக்கு சலுகை வழங்­கப்­ப­டு­கிறது. இதில் ஒரு வேளை உண­வுக்­கான நிதி­யு­தவி இரண்டு வெள்­ளி­யி­ல் இ­ருந்து 2.60 வெள்­ளிக்கு உயர்த்தப்­ ப­டு­கிறது.

உயர்­நி­லைப் பள்­ளி­களில் வாரம் பத்து வேளை உண­வு­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. இதில் ஒரு வேளை உண­வுக்­கான சலுகை $2.90லிருந்து 3.50 வெள்­ளிக்கு அதி­க­ரிக்­கப்­ப­டு­கிறது.

அடுத்த ஆண்டு பள்ளிப் பேருந்து நடத்­து­நர்­கள் ஒரு முறை கட்­டண உயர்­வுக்கு கோரிக்கை விடுக்­க­லாம் என்ற நிலை­யில் அதன் உச்ச வரம்பு ஏழு விழுக்­கா­டாக கல்வி அமைச்சு நிர்­ண யித்து உள்­ளது.

இதை அனு­ம­திப்­ப­தன் மூலம் மாண­வர்­க­ளுக்கு நடத்­து­நர்­கள் தொடர்ந்து போக்­கு­வ­ரத்து சேவை­ வழங்க முடி­யும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

"பல ஆண்­டு­க­ளாக கட்­டண உயர்­வுக்கு வரம்பு வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலை­யில் போட்­டித் ­தி­றன்­மிக்க நடை­மு­றை­க­ளைப் பின்­பற்றி அந்­தந்த பள்­ளி­க­ளைச் சேர்ந்த பேருந்து நடத்­து­நர்­கள் பேருந்து கட்­ட­ணத்தை நிர்­ண­யிப்­பார்­கள்.

"அண்­மைய மாதங்­க­ளாக எரி­பொ­ருள், மனி­த­வ­ளத்­துக்­கான செலவு அதி­க­ரித்­துள்­ளது. இத­னால் பள்ளி நடத்­து­நர்­கள் பெரும் சவால்­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். ஏற்­கெ­னவே இருந்த வரம்பு கார­ண­மாக அவர்­க­ளால் சாத்­தி­ய­மான கட்­ட­ணத்தை உயர்த்த முடி­ய­வில்லை," என்­று அமைச்சு விளக் கியது.

பள்­ளி பேருந்துக் கட்­ட­ணத்­தில் ஏதா­வது மாற்­றம் செய்­யப்­பட்­டால் இவ்­வாண்டு செப்­டம்­பர் மாதத்­தி­லி­ருந்து பெற்­றோ­ருக்­கும் பாது­காப்­பா­ளர்­க­ளுக்­கும் தெரி­விக்­கப்­படும். இத­னால் அடுத்த கல்வி ஆண்­டில் போக்­கு­வ­ரத்­து ஏற்­பாட்­டுக்கு பெற்­றோ­ரும் பாது­காப்­பா­ளரும் திட்­ட­மிட முடி­யும்.

இந்த விவ­கா­ரம் குறித்து கூர்ந்து கவ­னித்து, மாண­வர்­ களுக்கு கட்­டுப்­ப­டி­யா­கக் கூடிய வகை­யில் கட்­ட­ணம் இருப்­பதை பள்­ளி­க­ளு­டன் சேர்ந்து முடிவு செய்­யப்­படும் என்று கல்வி அமைச்சு மேலும் கூறி­யது.

கல்வி உபகாரச் சம்பளம் மற்றும் நிதியுதவி மூலம் தானும் பயன் பெற்றதாக ஃபேஸ்புக்கில் வெளி யிடப்பட்ட தகவலில் தெரிவித்த கல்வி அமைச்சர் சான் சுன் சிங், இத்தகைய ஆதரவு ஏற்படுத்தும் தாக்கங்களை நன்கு அறிந்திருப் தாகக் கூறினார்.

"போக்குவரத்து, உணவு போன்ற செலவுகளுக்கான நிதி ஆதரவு அதிகரித்துள்ளதால் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மன நிம்மதியைப் பெறுவர். அவர்களின் ஆற்றல் அதிகபட்சமாக வெளிப்படவும் இது ஆதரவாக இருக்கும்," என்று ஃபேஸ்புக் குறிப்பில் அமைச்சர் கூறி இருந்தார். இதற்கிடையே கல்விக்கான நாடாளுமன்றக் குழு வின் தலைவரான பயனியர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்ரிக் டே, மாணவர்களுக்கான ஆதரவை கல்வி அமைச்சு மேம் படுத்தி உள்ளதை வரவேற்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!