கடலில் மிதந்த 24 வயது ஆடவர் சடலம் மீட்பு

ஈஸ்ட் கோஸ்ட் பூங்­கா­வுக்கு அருகே கட­லில் 24 வயது ஆட­வர் ஒரு­வ­ரின் சட­லம் கண்­டெ­டுக்­கப்­பட்­டது. அவர் கட­லில் மூழ்­கி­விட்­டார் என்று நம்­பப்­ப­டு­கிறது.

எண், 920 ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா­வில் கார் பேட்டை சி-1க்கு அருகே உதவி தேவைப்­ப­டு­வ­தாக சனிக்­கி­ழமை காலை 7 மணி­அளவில் தனக்குச் செய்தி கிடைத்­தது என்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

அந்த முக­வரி, 'ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா ஒயிட் ஜெட்டி' பட­குத்­துறைக்கு அருகே திறந்­த­வெளி இடத்­தில் உள்ள 'பார்க்­லேண்ட் கிரீன்' என்ற பொழு­து­போக்கு இடம் அமைந்­துள்ள பகு­தி­யா­கும்.

அதி­கா­ரி­கள் அங்கு சென்­ற­போது கடல் நீரில் ஓர் உடல் மிதந்­தது. அதை மீட்புப்படையினர் மீட்­ட­னர்.

அந்த ஆட­வர் இறந்­து­விட்­ட­தாக குடி­மைத் தற்­காப்­புப் படை மருத்­து­வர்­கள் அறி­வித்­த­னர்.

இத­னி­டையே, தன் குடும்­பத்­தா­ரு­டன் மீன் பிடிப்­ப­தற்­காக அந்தப் பூங்­கா­வுக்குச் சென்­றி­ருந்த 60 வயது ஆட­வர் ஒரு­வர், கடற்­கரை ஓர­மாக ஓர் உடல் மிதந்­ததைத் தான் கண்­ட­தா­க­வும் அருகே காவல்­துறை அதி­கா­ரி­களும் குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­களும் இருந்­த­தைத் தான் பார்த்­த­தா­க­வும் ஷின் மின் டெய்லி செய்­தித்­தா­ளி­டம் தெரி­வித்­தார்.

மாண்ட அந்த ஆட­வர் கட­லில் விழுந்­த­தால் மூழ்­கி­யி­ருக்­க­லாம் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

இந்­தச் சம்­ப­வத்­தில் சூது இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை என்று காவல்­துறை கூறி­யது. புலன்­வி­சா­ரணை தொடர்­வ­தாகவும் அது தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!