ஸ்கூலிங், அமெண்டா தற்போது போதைப்பொருள் உட்கொள்கிறார்கள் என்பதற்கு ஆதாரமில்லை: அமைச்சர் சண்முகம் 

தேசிய நீச்சல் வீரர்களான ஜோசஃப் ஸ்கூ­லிங்­கும் அமெண்டா லிம்­மும் கஞ்சா உட்­கொண்­டதை தொடர்ந்து, அவர்களிடம் மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு விசா­ரணை நடத்­தி­ய­து. இந்த விசா­ர­ணை­யின் முடி­வில், அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படவில்லை என்று பலர் கருதினர்.

இதுகுறித்து தனது கருத்துகளை தெரிவித்த சட்ட, உள்துறை அமைச்சர் திரு கா.சண்முகம் ஸ்கூ­லிங்­கும் லிம்மும் மற்றவர்கள் போன்றே நடத்தப்பட்டதாக கூறினார். மக்கள் அவ்விருவருக்கும் தங்கள் ஆதரவை தருமாறு அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரம் குறித்து திரு சண்முகம் தனது பேஸ்புக் பக்கத்தில் மீண்டும் இன்று பதிவிட்டுள்ளார்.
“லிம்முக்கு எச்சரிக்கையும், ஸ்கூலிங்குக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பலர் நினைக்கின்றனர். அவர்கள் இருவரும் தற்போது போதைப்பொருள் உட்கொள்கின்றனர் என்பதற்கு ஆதாரம் இல்லை. இதைத்தான் அவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகள் காட்டுகின்றன. (ஆனால் அவர்கள் முன்பு போதைப்பொருளை உட்கொண்டதை நேர்மையுடன் ஒப்புக்கொண்டனர்.),” என்று பதிவிட்டிருந்தார் அமைச்சர்.

லிம்மிடன் போதைப்பொருள் உட்கொள்ளப் பயன்படுத்தும் உபகரணம் ஒன்று இருந்ததாகவும், அதற்காக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அவரை எச்சரித்ததாகவும் திரு சண்முகம் குறிப்பிட்டார்.

ஸ்கூ­லிங் தற்­போது தேசிய சேவை­ ஆற்றி வரு­வ­தால், அவர் மீது தகுந்த நட­வ­டிக்கை எடுக்க தற்­காப்பு அமைச்­சி­டம் அவர் ஒப்­ப­டைக்­கப்­பட்­டதாகக் கூறப்பட்டது.

போதைப்பொருள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

“போதைப்பொருள் கடத்துபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்றும், மரண தண்டனை இந்த குற்றத்துக்கு பொருந்தும்,” என்று அமைச்சர் சுட்டினார்.

“போதைப்பொருளை உட்கொண்டதை தவிர வேறு எந்த குற்றத்திலும் ஈடுபடாத புழங்கிகளுக்கு மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களை உதவிதேவைபடுபவர்களாகவே அரசாங்கம் கருகிறது. இவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படாது. அவர்களுக்கு எதிராக குற்றப் பதிவும் இருக்காது,” என்றார் திரு சண்முகம்.

இருப்பினும் வெளிநாடுகளில் போதைப்பொருளை உட்கொள்வது குற்றமாக கருதப்படும் என்று அமைச்சர் நினைவுப்படுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!