6 கிலோகிராம் எடையுள்ள பூனையை விழுங்கிய மலைப்பாம்பு

கூட்டுரிமை வீட்டு வளாகத்தில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த பூனையை மலைப்பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது. அந்த வளாகத்தில் குடியிருப்பவரின் செல்லப் பிராணி இந்த பூனை. அதன் எடை ஆறு கிலோகிராம்.

திங்கட்கிழமை இரவு பென் எனப்படும் அந்த பூனையை பலமுறை அழைத்தும் வீட்டுக்கு வரவில்லை என்று அதன் உரிமையாளர் ஏஞ்சல் லோ குறிப்பிட்டார். அன்று காலை தங்கள் வீட்டுக்கு அருகே ஒரு மலைப்பாம்பு பிடிப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தாக ஏஞ்சல் கூறினார். பாம்பின் வயிறு வீங்கியிருந்ததாகக் கூறப்பட்டிருந்தால் தன்னுடைய செல்லப் பிராணிக்கு நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்று ஏஞ்சல் உணர்ந்தார். மலைப்பாம்பை ‘ஏகர்ஸ்’ எனும் விலங்கு அக்கறை ஆராய்ச்சி, கல்வி சங்கம் அகற்றியது.

மலைப்பாம்பை விலங்கியல் தோட்டத்துக்கு எடுத்துசெல்லும் வழியில் பாம்பு பூனையை கக்கியது. பூனையின் சடலத்தை ஊழியர்கள் தூக்கியேறிந்தனர். இந்த தகவல் ஏஞ்சலுக்கு பின்னர்தான் தெரிவிக்கப்பட்டது.

செல்லப் பிராணியை இழந்து தனது குடும்பம் ஆழ்ந்த சோகத்தில் இருப்பதாக ஏஞ்சல் கூறினார். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த வட்டாரத்தில் குடியிருக்கும் ஏஞ்சல் இதுவரை இந்த பகுதியில் பாம்பை பார்த்ததில்லை என்று சொன்னார்.

மலைப்பாம்புகள் பத்து மீட்டர் வரை வளரும். இவை குருவி, பூனை, மான், நாய் போன்ற விலங்குகளை விழுங்கக்கூடியவை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!