தைவான் எம்ஆர்டி: சிங்கப்பூர் நிறுவனம் $1.4பி. ஒப்பந்தம்

தென் தைவா­னில் அமை­யும் புதிய கௌஷி­யுங் எம்­ஆர்டி மஞ்­சள் வழித்­த­டம் என்ற புதிய ரயில் முறைக்­கான சேவை­ வழங்கு­வதற்­கான $1.4 பில்­லி­யன் ஒப்­பந்­தத்தை சிங்­கப்­பூ­ரின் எஸ்டி இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னம், அதன் துணை நிறு­வ­னத்­தின் வழி பெற்று இருக்­கிறது.

ரயில்வே மின்­ன­ணுச் செயல்­மு­றை­களை வழங்­கு­வது, பூமிக்கு மேலே ரயில் பணி­ம­னையை வடி­வமைப்­பது, கட்­டு­வது, அதற்­குத் தேவைப்­படும் சாத­னங்­களை அமைப்­பது ஆகி­யவை அந்த உடன்­பாட்­டில் உள்­ள­டங்­கும்.

உடன்­பாடு 'அர்­பன் சொலியூஷன்ஸ்' என்ற எஸ்டி இன்­ஜி­னி­ய­ரிங் துணை நிறு­வ­னத்­துக்குக் கிடைத்து இருக்­கிறது.

அதன்­படி, அந்த நிறு­வ­னம் ஒட்­டு­மொத்த திட்ட நிர்­வா­கத்தை மேற்­பார்­வை­யி­டும். பல்­வேறு செயல்­மு­றை­க­ளை­யும் ஒருங்­கிணைக்­கும். சேவை­யை­யும் அது வழங்­கும் என்று எஸ்டி இன்­ஜி­னி­ய­ரிங் குழு­மம், பங்­குச் சந்தை அறி­விப்­பில் தெரி­வித்­துள்­ளது.

தொடர்புச் சாதன முறை­கள், தனி­யங்கி கட்­டண வசூ­லிப்­புச் சாத­னங்­கள், நடை­மேடை திரைக் கத­வு­கள், மின்­னணு சாதன முறைகள், பணி­மனை வடி­வமைப்பு, கட்­டு­மா­னம், பரா­ம­ரிப்புச் சாத­னம் ஆகிய அனைத்­தை­யும் எஸ்டி இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னம் வழங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

தைவான் எம்­ஆர்டி பணி­கள் இந்த ஆண்டு பிற்­ப­கு­தி­யில் தொடங்கி 10 ஆண்டு காலம் நடக்­கும். மஞ்­சள் வழித்­த­டம் என்பது தைவா­னின் கௌஷி­யுங் நக­ரின் ஆகப் புதிய ரயில் உள்­கட்­ட­மைப்­புத் திட்­ட­மா­கும். அந்த வழித்­த­டம் 22.8 கி.மீ. நீளத்­துக்கு அமைந்து இருக்­கும்.

அதில் 23 ரயில் நிலை­யங்­கள் இருக்­கும். கட்டி முடிக்­கப்­படும் போது அந்­தப் புதிய வழித்­த­டம் இப்­போது நடப்­பில் உள்ள அந்த நக­ரின் சிவப்பு மற்­றும் ஆரஞ்சு வழித்­த­டங்­களை இணைக்­கும். அதன் மூலம் அந்த நக­ரின் ஆறு முக்­கிய மாவட்­டங்­கள், பல்­க­லைக்­க­ழ­கங்­கள், பள்­ளிக்­கூ­டங்­கள் அனைத்­திற்­கு­மான இணைப்பு வச­தி­கள் பெரி­தும் மேம்­படும்.

புதிய வழித்­த­டத்­தில் ஏறக்­குறைய 1.2 மில்­லி­யன் பய­ணி­கள் பய­ணம் செய்­வார்­கள் என்று கணிக்­கப்­படு­கிறது. இந்த அளவு, கௌஷி­யுங் நகர மக்­களில் கிட்­டத்­தட்ட 42% ஆகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!