தம்பி மனைவிக்கு எதிராக வழக்கு தொடுத்த முன்னாள் அதிபர் ஓங் டெங் சியோங்கின் மகன்

முன்­னாள் அதி­பர் ஓங் டெங் சியோங்­கின் மூத்த மக­னான திரு ஓங் ஸி குவான், தம்­மு­டைய தம்பி மனை­வி­யான திரு­வாட்டி வாங் யி யிக்கு எதி­ராக வழக்கு தொடர்ந்­துள்­ளார்.

தங்­கள் பெற்­றோர் தோற்­று­வித்த கட்­ட­டக்­கலை வர்த்­த­கம் தொடர்­பில் தம்­மு­டைய தம்பி திரு ஓங் ஸி பூன் உட­னான சச்­ச­ர­வுக்­குத் தீர்­வு­கண்டு கிட்­டத்­தட்ட ஓராண்டு ஆகி­யுள்ள நிலை­யில், மூத்த திரு ஓங் இப்­போது வேறொரு விவ­கா­ரத்­தில் தம் தம்பி மனை­விக்கு எதி­ராக வழக்கு தொடர்ந்­துள்­ளார்.

பூமலை அருகே டெல்வி எஸ்டேட்­டில் உள்ள பங்­களா வீடு தொடர்­பில் இந்­தச் சச்­ச­ரவு எழுந்து உள்­ளது. மறைந்த திரு ஓங் டெங் சியோங் இந்த வீட்­டில்­தான் வசித்­தார் என ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.

திரு­வாட்டி வாங்­கிற்கு எதி­ராக திரு ஓங் ஆகஸ்ட் 17ஆம் தேதி வழக்கு தொடர்ந்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பெற்ற நீதி­மன்ற ஆவ­ணங்­கள் காட்­டின.

தற்­போ­தைய சந்தை மதிப்­பின் அடிப்­ப­டை­யில், தமது பங்­கில் உள்ள டெல்வி எஸ்­டேட் பங்­களா வீட்டை திரு­வாட்டி வாங் வாங்க, அல்­லது திறந்த சந்­தை­யில் இந்த வீட்டை விற்று அதன் மூலம் கிடைக்­கும் தொகையை தமக்­கும் திரு­வாட்டி வாங்­கிற்­கும் சரி­பா­தி­யாக பிரித்­துக்­கொள்ள நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு மூத்த திரு ஓங் விண்­ணப்­பித்­துள்­ளார்.

இந்த வீடு திறந்த சந்­தை­யில் விற்­கப்­பட்­டால் அதி­லி­ருந்து கிடைக்­கும் தொகை­யைக் கொண்டு கட்­ட­ணங்­கள், முத்­திரை வரி, சொத்து விற்­பனை தொடர்­பி­லான செல­வு­களை ஈடு­கட்ட தமது மனு­வில் திரு ஓங் கோரி­யுள்ளார்.

வீட்டு விற்­ப­னை­யி­லி­ருந்து கிடைக்­கும் தொகை, தாமும் தம் தம்பி மனை­வி­யும் வைத்துள்ள தலா 50 விழுக்­காடு பங்­கின் அடிப்­ப­டை­யில் தொகை­யைச் சம­மா­கவோ நீதி­மன்­றம் நிர்­ண­யிக்­கும் அள­வின்­ப­டியோ பிரித்­துக்­கொள்ள ஆணையிடும்படி திரு ஓங் கோரி­யுள்ளார்.

இந்த விவ­கா­ரம் நீதி­மன்­றத்­தின் முன் இருப்­ப­தால் இது­கு­றித்து கருத்­து­ரைக்க தம்மால் இயலாது என்று மூத்த திரு ஓங் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!