பலமுறை ஆர்ப்பாட்டம் நடத்தியவருக்கு அதிகபட்ச சிறை, அபராதம்

அமெ­ரிக்­கத் தூத­ர­கத்­தில் சட்­ட­வி­ரோ­த­மாக ஆர்ப்­பாட்­டம் நடத்திய ஆட­வ­ருக்கு அதி­க­பட்ச சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ர­ரான 46 வயது யான் ஜுன் பல ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­ட­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கடந்த ஆறு ஆண்­டு­களில் தொடர் ஆர்ப்­பாட்­டக்­கா­ர­ரான யானுக்கு எதி­ராக ஒன்­பது முறை நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

பொது இடங்­களில் சட்­ட­விரோ­த­மாக ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­ய­தற்­காக அவர் ஏற்­கெ­னவே சிறைக்­குச் சென்­ற­வர்.

இந்­நி­லை­யில் சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்டு 18 நாள்­க­ளி­லேயே மீண்­டும் அதே குற்­றத்­துக்­காக அவ­ருக்கு எதி­ராக நட­வடிக்கை எடுக்­கப்­பட்­டது.

யானுக்கு நேற்று 12 மாதச் சிறைத் தண்­ட­னை­யும் தண்­ட­னைக் கழிவு காலத்­தில் அவர் அக்­குற்­றங்­க­ளைப் புரிந்­த­தால் அவ­ருக்­குக் கூடு­த­லாக 53 நாள்­கள் சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­பட்­டது.

அத்­து­டன் அவ­ருக்கு $5,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது. அதை அவ­ரால் செலுத்த முடியா­விட்­டால் கூடு­த­லாக ஆறு மாதச் சிறை விதிக்­கப்­படும்.

கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி­யன்று நேப்­பி­யர் சாலை­யில் உள்ள அமெ­ரிக்­கத் தூத­ர­கத்­துக்கு வெளியே அமெ­ரிக்க, சிங்கப்­பூர், கனடா அர­சாங்­கத்­தைக் கடு­மை­யாக விமர்­சிக்­கும் பதா­கை­களை வைத்­தார்.

தாம் அவ்­வாறு செய்­யப்­போ­வ­தாக பல்­வேறு அதி­கா­ரி­க­ளி­ட­மும் ஊட­கங்­க­ளி­ட­மும் அவர் அதற்கு முன்பே தெரி­வித்­த­தாக அர­சாங்க வழக்­க­றி­ஞர் கூறி­னார்.

யான் என்ன வேலை செய்­கி­றார் என்­பது குறித்து நீதி­மன்ற ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

அமெ­ரிக்­கத் தூத­ர­கத்­துக்கு வெளியே யான் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­ய­போது உரக்க கத்­தி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அமை­தி­யாக இருக்­கும்­படி காவல்­துறை அதி­கா­ரி­கள் எவ்­வ­ளவோ கேட்­டுக்­கொண்­டும் யான் அதைப் பொருட்­ப­டுத்­த­வில்லை. இதை­ய­டுத்து அவர் கைது செய்யப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

யான் பெரும்­பா­லும் அர­சி­யல்­வா­தி­க­ளை­யும் நீதித் துறை­யைச் சேர்ந்­த­வர்­க­ளை­யும் குறி­வைத்து ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­ய­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ஏறத்­தாழ 2016ஆம் ஆண்­டில் ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்­து­வதை யான் தொடங்­கி­ய­தாக அறி­யப்­படு­கிறது. இஸ்­தா­னா­வுக்­கும் அமெ­ரிக்­கத் தூத­ர­கத்­துக்கும் வெளியே ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­ய­தற்­காக அவ­ருக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­தாக நீ்திமன்ற ஆவ­ணங்­கள் தெரி­வித்­தன.

அவர் இதற்கு முன்பு செய்த குற்­றங்­க­ளுக்­காக அவ­ருக்கு மூன்று வாரங்­க­ளி­லி­ருந்து ஏறத்­தாழ ஓராண்டு வரை சிறைத் தண்­ட­னை­யும் ஒவ்­வொரு முறை­யும் கிட்­டத்­தட்ட $5,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!