வர்த்தக கட்டடங்களில் ஒரு மாத தீ தவிர்ப்புப் பயிற்சி தொடக்கம்

வர்த்தக தொழில்துறை கட்டடங்களில் மேற்கொள்ளப்படும் ஒரு மாத கால தீத்தடுப்பு பயிற்சி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் திரும்பி இருக்கிறது. தேசிய தீ தவிர்ப்பு, அவசரகால ஆயத்த மன்றம், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையுடன் சேர்ந்து அந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது.

தீ மூளாமல் தடுப்பது எப்படி என்பதைப் போதிப்பதும் அவசரநிலை ஆயத்த பயிற்சிகளை மேம்படுத்துவதும் அந்த ஒரு மாத கால இயக்கத்தின் நோக்கம்.

இந்த மாதம் முழுவதும் கிட்டத்தட்ட 310 வர்த்தக, தொழில்துறை கட்டடங்களில் அந்தப் பயிற்சி நடக்கும். அதில் 58,000க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு இருப்பார்கள்.

ஆண்டுதோறும் நடக்கும் தீ தவிர்ப்பு, மக்களை அப்புறப்படுத்தும் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.

கூ டெக் புவாட் மருத்துவமனையின் 10வது மாடி வார்டில் ஓர் அறையில் தீ மூண்டதால் புகைக் கிளம்பியது. அதைச் சுவாசித்த ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டார். தீ மூண்டதை அறிந்து ஒரு தாதி

எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தார். உடனடியாக ஈசூன் ஹெல்த் கம்பெனி என்ற நிறுவனத்தின் அவசரகால குழுவினர் உதவிக்கு விரைந்தனர். இப்படி ஒரு காட்சி சோடிக்கப்பட்டு அந்தப் பயிற்சி நடந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!