வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவசமாகப் பொருள்களை வழங்கும் புதிய கடை

வெளிநாட்டு ஊழியர்கள் அப்பர் பாய லேபாரில் புதிததாகத் திறக்கப்பட்ட கடையில், பைகள், காற்றாடிகள், மெத்தைகள் போன்றவற்றை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

470 அப்பர் பாய லேபார் ரோட்டில் உள்ள அந்தக் கடையில் பொதுமக்கள் நன்கொடையாக அளிக்கும் பொருள்கள் வைக்கப்படும்.

'இன்ஸ்பையர்' (InspIRRe) எனும் அந்தக் கடையை இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ் (ItsRainingRaincoats) தொடங்கி இருக்கிறது. மூத்த மனிதவள த் துணை அமைச்சர் ஜாக்கி முகம்மது சனிக்கிழமை (செப்டம்பர் 3) அன்று கடையைத் திறந்து வைத்தார்.

கட்டடத்தின் கீழ்த்தளத்தில் கடை செயல்படும். மேல்தளத்தில் இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ் அமைப்பின் தொண்டூழியர்கள் பணியாற்றவும் இளைப்பாறவும் இடவசதி இருக்கும்.

இன்ஸ்பையர் கடையில் வெளிநாட்டு ஊழியர்கள், மாணவர்களுடன் வர்த்தகங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றுக்கான நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

ஸ்பேஸ் மேட்ரிக்ஸ் எனப்படும் வடிவமைப்பு நிறுவனம் கட்டணம் பெறாமல் கடையின் புதுப்பிப்புப் பணிகளைச் செய்து கொடுத்துள்ளது.

பொதுமக்களும் நிறுவனங்களும் நன்கொடையாக வழங்கிய அறைகலன்களும் வேறு பொருள்களும் அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட பொருள்களை நன்கொடையாக அளிக்க விரும்புவோர் இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ் அமைப்பை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், இலவசமாக விளையாட்டு காலணிகளைப் பெற விரும்பும் வெளிநாட்டு ஊழியர்கள் இன்ஸ்பையர் கடைக்குச் செல்லலாம்.

அமைப்பு அண்மையில் நடத்திய ஐந்து நாள் நன்கொடைத் திரட்டில் பல நூறு விளையாட்டுக் காலணிகள் நன்கொடையாகப் பெறப்பட்டன. .

இதுவரை 70 வெளிநாட்டு ஊழியர்கள் காலணிகளைப் பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று தொண்டூழியர்கள் கட்டுமானத் தளங்களுக்குச் சென்று 50 பேருக்குக் காலணிகளை அளித்தனர்.

மறுநாள் நடத்தப்பட்ட விளையாட்டு நாள் நிகழ்ச்சியில் மேலும் 20 பேர் காலணிகளைச் தேர்ந்தெடுத்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!