துறைமுகப் பகுதிக்குத் தனி 5ஜி கட்டமைப்பு செயல்படும் 2025ல் தொலைவில் இருந்து கப்பல்கள் கட்டுப்படுத்தப்படும்; ஓட்டுநர் இல்லா வாகனங்கள்

சிங்­கப்­பூர் தனது துறை­முகப் பகுதி­களுக்­கென்றே தனி 5ஜி கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்த திட்­ட­மி­டு­கிறது.

அந்­தத் திட்­டம் 2025 நடுப்­ப­குதி வாக்­கில் நடப்­புக்கு வரும்­போது துறை­மு­கத்­தில் கப்­பல்­கள் தொலை­தூ­ரத்­தில் இருந்து கட்­டுப்­ப­டுத்­தப்படும்.

ஓட்­டு­நர் இல்­லாத வாக­னங்­கள் துறை­மு­கத்­தில் அதி­கமாகப் புழங்­கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணை­க­ரை­க­ளி­லும் துறை­முக முனை­யங்­க­ளி­லும் சரக்கு ஏற்­றும் தளங்­க­ளி­லும் நீர் வழி­களி­லும் முழுமை­யான கடல்­துறை 5ஜி கட்­ட­மைப்பைச் சாதிப்­பதே நமது இலக்கு என்று போக்­கு­வ­ரத்து, நிதி மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் தெரி­வித்­தார்.

அத்­த­கைய கட்­ட­மைப்பை எம்1 நிறு­வ­னம் அமைக்­கும். அது சிங்­கப்­பூ­ரின் துறை­முக கடற்­ப­கு­தி­களில் கட்­டம் கட்­ட­மாக நடப்­புக்கு வரும் என்று அமைச்­சர் கூறினார்.

சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலை­யத்­தில் நடந்த இந்த ஆண்­டின் அனைத்­து­லக கடல் பாது­காப்பு மாநாட்­டில் அமைச்­சர் பேசி­னார்.

5ஜி கட்­ட­மைப்பு, 4ஜி கட்­ட­மைப்பை­விட 10 மடங்கு வேக­மாக இருக்­கும். ஒரே நேரத்­தில் அதிக சாத­னங்­கள் அதில் இணைந்து செயல்­பட அது வழி­வ­குக்­கும்.

சிங்­கப்­பூ­ரின் துறை­மு­கப் பகுதி­களில் அமை­ய­வி­ருக்­கும் அந்­தக் கட்­ட­மைப்பு, கடல்­துறை தொழில்­நுட்­பப் புத்­தாக்­கங்­க­ளைப் பரி­சோ­தித்து பார்ப்­ப­தற்­கான ஒரு தள­மா­க­வும் சேவை­யாற்­றும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

அத்­த­கைய கட்­ட­மைப்­பின் கார­ண­மாக கடல்­துறை ஆய்வு, உரு­வாக்­கத்தை வேகப்­ப­டுத்த முடி­யும். புதுப்­புது வழிமுறை­க­ளைப் பரி­சோ­தித்து பார்த்து கடல்­துறை பாது­காப்பை மேம்­ப­டுத்த முடி­யும் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, உல­கி­லேயே துறை­முக கடற்­ப­கு­திக்­கென்றே ஒரு 5ஜி கட்­ட­மைப்பை விரி­வு­படுத்­தும் முதல் நாடு சிங்­கப்­பூர்­தான் என்று தக­வல், தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணையம் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

அதோடு மட்­டு­மின்றி, 5ஜி கட்­ட­மைப்புப் பரி­சோ­த­னைத் தள­மும் உல­கின் முத­லா­வ­தாக இருக்­கும்.

அது, கடல்­துறை தொழில்­நுட்­பத்­திற்­கான ஆகப் பெரிய ஒன்­றா­கத் திக­ழும் என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

தொடக்­க­மாக கப்­பல்­கள் தொலை­தூ­ரத்­தில் இருந்து இயக்­கப்­படும். இதை ஆற்­றல்­மிகு நிபு­ணர்­கள் செய்­வார்­கள். பழு­து­பார்ப்புப் பணி­கள் தேவைப்­படும் கப்­பல்­க­ளுக்கு முக்­கி­ய­மான பகு­திப் பொருளை விரை­வாக கொண்டு கொடுக்­கக்­கூ­டிய ஆளில்லா வானூர்­தி­க­ளைப் பயன்­ப­டுத்­தும் திட்­ட­மும் இருக்­கிறது என்று ஆணை­யம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!