அங் மோ கியோ, தெம்பனிஸ் வீடுகளுக்கு அதிக வரவேற்பு

ஆகஸ்ட் மாதத்துக்கான பிடிஓ வீடுகள் வெளியீடு

முதிர்ச்சியடைந்த அங் மோ கியோ, தெம்பனிஸ் பேட்டைகளில் உள்ள பெரிய வீடுகளே, ஆகஸ்ட் மாதத்துக்கான தேவைகேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) விற்பலை நிகழ்வில் ஆகப் பிரபலமான வீடுகள் ஆகத் திகழ்ந்தன.

நேற்று மாலை 5 மணி வரையிலான நிலவரப்படி, முதல் முறை வீடு வாங்குவோரில் கிட்டத்தட்ட எட்டுப் பேர், சென்ட்ரல் வேவ்@அங் மோ கியோ திட்டத்தில் விற்பனைக்கு விடப்பட்ட 398 நான்கறை வீடுகளுக்கும் 372 ஐந்தறை வீடுகளுக்கும் போட்டி போட்டனர்.

நான்கறை வீடுகளுக்கான விலை $535,000லிருந்து $676,000 வரையிலும் ஐந்தறை வீடுகளுக்கான விலை $713,000லிருந்து $877,000 வரை இடைப்பட்டிருந்தது.

தெம்பனிசில் உள்ள சன் பிளாசா ஸ்பிரிங் திட்டத்தில் உள்ள ஐந்தறை வீடுகளுக்கான விலை $520,000லிருந்து தொடங்கியது.

அங்குள்ள 117 வீடுகளுக்கு முதல் முறை வீடு வாங்குவோரில் 17.2 பேர் போட்டி போட்டனர்.

முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் உள்ள 95% வீடுகள் முதல் முறை வீடு வாங்குவோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, புக்கிட் மேராவில் உள்ள அலெக்சாண்டிரா வேல், ஹேவ்லாக் ஹில்சைட் ஆகிய இரு குடியிருப்புகளில் உள்ள 353 மூவறை வீடுகளுக்குப் போட்டிபோடும் விகிதம் ஒரு நபருக்குக் குறைவு. அப்படி என்றால் முதல் முறை வீடு வாங்குவோர் அனைவரும் ஒரு வீட்டைத் தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

பிரதான இடத்தில் உள்ள பொது வீடமைப்பு மாதிரித் திட்டத்தில் உள்ள இரு குடியிருப்புகளில் வசிப்போர் அதில் குறைந்தது 10 ஆண்டுகள் வசிக்க வேண்டும்.

ஒருவேளை அவர்கள் முதல் முறையாக அந்த வீட்டை பொதுச் சந்தையில் விற்றால், அவர்களுக்குக் கிடைக்கும் கட்டணச் சலுகையில் 6% பணம் பிடித்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பெரும்பாலான குடியிருப்புத் திட்டங்களில் மூவறை வீடுகளுக்கான முதல்முறை வீடு வாங்குவோர் விகிதம் குறைவாகவே இருந்தது என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று மாலை தெரிவித்தது.

"உட்லண்ட்சில் உள்ள உட்லண்ட்ஸ் சவுத் பிளேன்ஸ் குடியிருப்பில், முதல் முறை வீடு வாங்குவோர் விகிதம் மற்ற எல்லா குடியிருப்புகளில் உள்ள மூவறை வீடுகளைக் காட்டிலும் குறைவுதான்," என்று கழகம் சுட்டியது.

புக்கிட் மேரா பேட்டையில் உள்ள 1,298 நான்கறை வீடுகளுக்கு முதல்முறை வீடு வாங்குவோர் விகிதம் 3.3% ஆக இருந்தது. ரெட்ஹில் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ள அலெக்சாண்டிரா வேல் குடியிருப்பில் உள்ள மூவறை வீடுகளின் விலை மானியமின்றி $385,000லிருந்து $477,000 வரையிலும் நான்கறை வீடுகளின் விலை மானியமின்றி $547,000லிருந்து $705,000 வரைக்கும் இடைப்பட்டிருக்கும். இங்குள்ள இரு புளோக்குகளில் ஒன்றில் வாடகை வீடுகளும் இடம்பெற்றிருக்கும்.

தியோங் பாரு எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ள ஹேவ்லாக் ஹில்சைட் பிடிஓ திட்டத்தில் மூவறை வீடுகளின் விலை $370,000லிருந்து $515,000 வரைக்கும் நான்கறை வீடுகளின் விலை $531,000லிருந்து $730,000 வரையிலும் இடைப்பட்டிருக்கும்.

இரு வீடமைப்புத் திட்டங்களுக்கும் காத்திருப்பு காலம் சுமார் ஐந்தாண்டுகள். அனைத்து வீடமைப்புத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வீவக இணையத் தளத்தில் நேற்றிரவு 11.59 மணிக்கு நிறைவடைந்தன. வீடுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும்.

இந்த வீட்டு விற்பனைக்கான வரிசை எண் வைத்திருப்போர் தோ பாயோவில் உள்ள வீவக நடுவத்தில் வரும் நவம்பர் முதல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்.

புக்கிட் மேரா வீடுகளைக் காட்டிலும் அங் மோ கியோ, தெம்பனிஸ் வீடுகள் பிரபலமாக உள்ளன என்று நிபுணர்கள் கருத்துத் தெரி வித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!