சமூகப் பராமரிப்பு ஊழியர்கள் 121 பேருக்கு தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள விருதுகள்

பிரைட் ஹில் எவர்கிரீன் இல்லத்தில் தலைமை இயன்மருத்துவராகப் பணியாற்றும் 45 வயது சதிஷ் லட்சுமணன், எதிர்காலத்துக்குத் தயார்ப்படுத்திக்கொள்ள இன்னும் அதிகம் செய்தல் வேண்டும் என்று கருதுகிறார்.

நேற்று சமூக பராமரிப்பு மனிதவள மேம்பாட்டு விருது பெற்ற 121 சமூகப் பராமரிப்பு ஊழியர்களில் திரு சதிஷும் ஒருவர்.

முதிய நோயாளிகளின் தேவைகளை இன்னும் சிறப்பாகப் பூர்த்தி செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் முதுமையியல் துறையில் முதுகலைப் பட்டப் படிப்பை மேற்கொண்டுள்ளார்.

"முதியவர்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய உபகரணங்ளை எளிதில் பெற்றுவிட முடியும். ஆனால், அவர்களுக்கு இதயபூர்வமான பராமரிப்பை வழங்குவதே சுகாதாரப் பராமரிப்புத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வர முடியும்," என்று திரு சதிஷ் கூறினார்.

சமூகப் பராமரிப்பு ஊழியர்களில் நேற்று விருது பெற்ற மற்றொருவர் ஜென்னி ஆங். இந்த விருதைக் கொண்டு அவர்கள் தங்கள் திறன்களை மேலும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

பயணத்துறையில் 20 ஆண்டுகளாக ஒரு வெற்றிகரமான வாழ்க்கைத்தொழிலை மேற்கொண்டிருந்த திருவாட்டி ஆங், 2016ஆம் ஆண்டில் அந்த வேலையிலிருந்து விலகினார்.

சமூகத்துக்கு சேவையாற்ற எதாவது செய்ய வேண்டும் என்று விரும்பியவர், தனது திறன்களை நல்ல காரியத்துக்காகப் பயன்படுத்த எண்ணினார்.

அவரின் தாயாருக்கு 2012ல் இலேசான பக்கவாதம் ஏற்பட்டது. அப்போது 50 வயதுகளில் இருந்த திருவாட்டி ஆங்தான், அவரது முதன்மைப் பராமரிப்பாளராக இருந்தார்.

2017ல் அவர், செயின்ட் லியூக் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நிலைய மேலாளராக சேர்ந்தார். சொங் பாங்கில் உள்ள அந்நிலையத்தின் அன்றாட செயல்முறைகளை மேற்பார்வையிட்டார். அந்த இல்லத்தில் 50 மூத்த குடிமக்களைப் பராமரிக்க முடியும்.

தற்போது திருவாட்டி ஆங், அங் மோ கியோ கிளையை நிர்வகித்து வருகிறார். 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொவிட்-19 கிருமித்தொற்று தலைதூக்கிய காலத்தில் அவர் அந்த நிலையத்தை அமைக்க உதவியிருந்தார். அங்கு ஒருங்கிணைந்த தாதிமை இல்லம் அமைந்துள்ளது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தற்போது செயல்முறை முதியவியல் துறையில் முதுகலை படிப்பை மேற்கொண்டிருக்கும் திருவாட்டி ஆங், இந்த விருது தனது கல்விக் கட்டணத்தைச் செலுத்த உதவியாக இருக்கும் என்றார்.

இத்துறையில் புதிதாக சேர்ந்துள்ளவர்களுக்கும் தற்போதைய சமூகப் பராமரிப்பு ஊழியர்களுக்கும் இந்த விருது பயிற்சி ஆதரவையும் வாழ்க்கைத் தொழிலில் அடுத்த நிலையை அடைவதற்கும் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும்.

கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு இந்த விருதை சுமார் 700 பேருக்கு வழங்கியுள்ளது.

சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நேற்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான சுகாதாரத்துக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம், "இன்னும் அதிகமான பணியிடைக்கால ஊழியர்கள் இத்துறையில் சேர்ந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். சமூகத்துக்குச் சேவையாற்ற எண்ணம் கொண்டிருக்கும் யாராகினும் இத்துறையில் சேரலாம்.

"பெருந்தொற்றுக் காலத்தில் அயராது பாடுபட்ட சமூகப் பராமரிப்பு ஊழியர்கள் எதிர்காலத்தில் வரவுள்ள இன்னும் அதிகமான சவால்களுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்," என்றார்.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் 65 வயதுக்கு மேற்பட்டோர் 25 விழுக்காட்டினராக இருப்பார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!