குடும்பங்களுக்கான ஆதரவு: ஆறு வயது வரையிலான சிறுவர் மேம்பாட்டுக் கணக்கில் $200 பணம் நிரப்பப்படும்

ஆறு வயது வரையுள்ள சுமார் 230,000 சிங்கப்பூர் சிறுவர்கள் தங்கள் சிறுவர் மேம்பாட்டுக் கணக்கில் வரும் வியாழக்கிழமையன்று $200 பெறுவார்கள்.

இந்தத் தொகை சிறுவர் மேம்பாட்டுக் கணக்கில் நேரடியாக இம்மாதம் 8ஆம் தேதியிலிருந்தோ அல்லது சிறுவர் மேம்பாட்டுக் கணக்கு திறக்கப்பட்டதிலிருந்தோ கட்டம் கட்டமாக வரவு வைக்கப்படும் என்று நிதி அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் நேற்று தங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்தன.

தங்கள் பிள்ளைகளுக்காக இன்னும் சிறுவர் மேம்பாட்டுக் கணக்கைத் திறக்காத பெற்றோர்கள் அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதிக்குள் அந்தக் கணக்கைத் திறந்துவிட வேண்டும். அப்போதுதான் இந்த $200 தொகை அதில் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட குடும்பங்களுக்கான ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிறுவர் மேம்பாட்டுக் கணக்கில் பணம் நிரப்புதலும் அடங்கும்.

இதன் மூலம் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கு ஆகும் செலவைச் சமாளிக்க பெற்றோருக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படுகிறது.

சிறுவர் மேம்பாட்டுக் கணக்கில் உள்ள நிதியை, சம்பந்தப்பட்ட பிள்ளை அல்லது அதன் உடன்பிறப்பின் கல்விச் செலவுகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரப் பராமரிப்புக் கழகங்களில் ஏற்படும் செலவுகளுக்கும் பயன்படுத்தலாம்.

பதிவு செய்யப்பட்ட குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள், பாலர் பள்ளிகள், சிறப்புக் கல்விப் பள்ளிகள், ஆரம்பகால தலையீட்டுத் திட்டங்களை வழங்கும் நடத்துநர்கள், சிறப்புத் தேவை உடையவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பச் சாதனங்களை வழங்கும் நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருந்துக் கடைகள், மூக்குக்கண்ணாடிக் கடைகள் ஆகியவற்றுக்கும் சிறுவர் மேம்பாட்டுக் கணக்கில் உள்ள நிதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இது குறித்து கருத்துரைத்த 31 வயது திருமதி எம். சரண்யா, "எனது மகனுக்கு இந்த ஆண்டு இரண்டு வயதாகிறது. அவருக்கு இந்த $200 பணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவரது சிறுவர் மேம்பாட்டுக் கணக்கில் உள்ள நிதியைக் கொண்டு அவரது மருத்துவச் செலவுகள், குழந்தைப் பராமரிப்பு கட்டணங்கள் ஆகியவற்றுக்கு செலுத்தி வருகிறோம். இந்தக் கூடுதல் நிதி எங்கள் செலவுகளை மேலும் குறைக்க உதவும்," என்றார்.

சிறுவர் பராமரிப்புக் கணக்கில் பணம் நிரப்பப்பட்டவுடன் பிள்ளைகளின் பெற்றோருக்கு அது குறித்து குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது கடிதம் வாயிலாக தெரிவிக்கப்படும். பெற்றோரும் தங்கள் பிள்ளையின் சிறுவர் பராமரிப்புக் கணக்கு தொடர்பான மாதாந்திர அறிக்கையைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மோசடிச் செய்திப் பரவலைத் தவிர்க்க பெற்றோருக்கு அனுப்பும் தகவலில் 'MSF' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் என்று இரு அமைச்சுகளும் வலியுறுத்தின. அதில் சிறுவர் மேம்பாட்டுக் கணக்கில் பணம் நிரப்பப்பட்டு விட்டது என்ற தகவல் மட்டும்தான் இருக்கும்.

இது தொடர்பான தகவல்கள் வாட்ஸ்அப் அல்லது இதர கைப்பேசி தகவல் தளங்களிலோ அனுப்பப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!