1,600 வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள் ஒரே சட்டத்தின் கீழ் வரும்

சிங்கப்பூரில் உள்ள 1,600 வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள் ஒரே சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இது நடப்புக்கு வரும். கிருமித் தொற்றை துரிதமாக கட்டுப்படுத்தவும், விடுதிகளில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 440,000 வெளிநாட்டு ஊழியர்கள் பயனடைவர் எனக் கூறப்பட்டது.
ஏழுக்கும் அதிகமான படுக்கைகள் உள்ள சிறிய விடுதிகளுக்கு வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள் சட்டம் விரிவுபடுத்தப்படும். தற்போது ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் தங்கும் 53 பெரிய விடுதிகள் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த விடுதிகளில் மொத்தம் 256,000 படுக்கைகள் உள்ளன.
அனைத்து விடுதிகளும் மனிதவள அமைச்சின் வாழ்க்கைத் தர வழிகாட்டியை பின்பற்றவேண்டும். ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் குறைந்தபட்ச இடம், ஓர் அறையில் அதிகபட்ச குடியிருப்பாளர்கள், தூய்மை, காற்றோட்டம் போன்ற அம்சங்களை அனைத்து விடுதிகளும் பின்பற்றவேண்டும். இதோடு, பெரிய விடுதிகள் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு, நலன் ஆகிய அம்சங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் முயற்சியில் இது ஒரு முக்கிய முன்னேற்றம் என்று மனிதவள துணையமைச்சர் கோ போ கூன் கூறினார்.
சென்றாண்டு மார்ச் மாத நிலவரப்படி, 280,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளில் வசித்தனர். இவர்களில் ஐந்தில் ஒருவர் சட்டத்தால் நிர்வகிக்கப்படாத விடுதிகளில் தங்கியுள்ளனர். கட்டுமானத் தளங்களில் அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்கள், மாற்றியமைக்கப்பட்ட தொழிற்பேட்டைகள், அரசாங்க சார்பற்ற அமைப்புகள் அளிக்கும் தற்காலிக இடங்கள் ஆகியவற்றில் இவர்கள் வசிக்கின்றனர்.
முதலாளிகள், தங்குவிடுதி நடத்துபவர்கள் ஆகியோருடன் கலந்தரையாடல் நடத்திவருவதாக மனிதவள அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!