உயரும் மறுவிற்பனை வீட்டு விலைகள்

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) மறு­விற்­பனை வீட்டு விலை­கள் தொடர்ந்து 26வது மாத­மாக ஏற்­றம் கண்­டுள்­ளது. அதன்­படி 33 மறு­விற்­பனை வீடு­கள் தலா குறைந்­தது $1 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்­டுள்­ளன.

வீவக வீடுகளின் மறுவிற்பனை எண்ணிக்கை ஆண்டு அடிப்­ப­டை­யில் 10.8% அதி­க­ரித்­தது. கடந்த மாதம் மட்­டும் அது 0.4% ஏற்­றம் கண்­டது. ஜூலை மாத விகி­த­மான 0.7%ஐவிட அது குறை­வு­தான் என்று சொத்­துச் சந்தை இணை­யத் தளங்­க­ளான 99.கோ, எஸ்­ஆர்­எக்ஸ் ஆகி­யவை நேற்று தெரி­வித்தன.

குறைந்­தது ஒரு மில்­லி­யன் வெள்­ளிக்கு கடந்த மாதம் விற்­கப்­பட்ட 33 வீடு­களில் எட்டு தோ பாயோ­வி­லும் ஏழு வீடு­கள் புக்­கிட் மேரா­வி­லும் ஆறு வீடு­கள் குவீன்ஸ்­ட­வு­னி­லும் உள்­ளன.

இவற்­றில் ஆக விலை உயர்ந்த மறு­விற்­பனை வீடாக 'த பீக்@ தோ பாயோ' கட்­ட­டத்­தில் உள்ள ஐந்­தறை வீடு திகழ்ந்­தது. 1,259 சதுர அடி பரப்­ப­ளவுகொண்ட அந்த வீடு $1.35 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்­டது.

இது­போன்று வரும் மாதங்­களில் இன்­னும் அதி­க­மான மில்­லி­யன் வெள்ளி வீடு­கள் விற்­கப்­ப­ட­லாம் என்று சொத்­துச் சந்தை நிபு­ணர்­கள் கருத்­து­ரைக்­கின்­ற­னர்.

"வீவக மறு­விற்­பனை சந்­தை­யில் வீடு வாங்­கும் உணர்­வு­கள், வட்டி விகி­தங்­கள் அதி­க­மாக இருந்­தா­லும் இன்­னும் நேர்­ம­றை­யா­கத்­தான் உள்­ளன," என்­றார் இஆர்ஏ சொத்­துச் சந்தை ஆய்வு, ஆலோ­சனை நிறு­வ­னத்­தின் தலை­வர் நிக்­க­லஸ் மாக் கூறி­னார்.

"வட்டி விகித அதி­க­ரிப்பு, வீடு வாங்­கு­வோர் சிலரை முதிர்ச்­சி­ய­டை­யாத பேட்­டை­க­ளுக்கு மாற வைத்­துள்­ளது.

"அங்கு வீட்டு விலை­கள் தங்­க­ளுக்­குக் கட்­டிப்­ப­டி­யாக உள்­ளதை அவர்­கள் உணர்ந்­துள்­ள­னர்," என்­றார் ஹட்­டன்ஸ் ஏஷியா நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி மார்க் யாப்.

முதிர்ச்­சி­ய­டை­யாத பேட்­டை­களில், ஆக அதிக விலைக்கு விற்­கப்­பட்­டது உட்­லண்ட்ஸ் அவென்யூ 1ல் உள்ள ஓர் எக்­ச­கி­யூ­டிவ் வீடு. 2,067 சதுர அடி பரப்­பளவுகொண்ட அந்த வீடு $1.02 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்­டது.

கடந்த மாதத்­தின் மொத்த மறு­விற்­பனை பரி­வர்த்­த­னை­யில் அந்த மில்­லி­யன் வெள்ளி மதிப்­பி­லான 33 வீடு­கள் 1.4% வகித்­தன.

ஜூலை­யில் அதே எண்­ணிக்­கை­யி­லான அதா­வது குறைந்தது மில்­லி­யன் வெள்ளி மதிப்பி­லான 33 வீடு­கள் விற்­கப்­பட்­டன.

குறை­வான எண்­ணிக்­கை­யி­லான வீவக மறு­விற்­பனை வீடு­கள் (2,323 வீடு­கள்) கடந்்த மாதம் கைமா­றின. அதன் விகி­தம் 1.7%.

ஆகஸ்ட் மாதத்­து­டன் ஒப்­பு­நோக்க, மறு­விற்­பனை வீட்­டுப் பரி­வர்த்­தனை 15.5% சரிந்­தது.

விலை­யேற்­றம் அனைத்து வகை­யான வீடு­க­ளி­லும் தென்­பட்­டது. முதிர்ச்­சி­ய­டைந்த மற்­றும் முதிர்ச்­சி­ய­டை­யாத பேட்­டை­களில் ஐந்­தறை வீடு­களில் விலை­களே ஆக அதி­க­மாக 0.8% அதி­க­ரித்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!