மறைந்த எலிசபெத் அரசிக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி

உல­கம் எங்­கும் உள்ள 14 காமன்­வெல்த் நாடு­க­ளின் நாட்­டுத் தலை­வ­ராக இருந்த பிரிட்­டிஷ் அரசி எலி­ச­பெத்­துக்கு உல­கத் தலை­வர்­கள் புக­ழா­ரம் சூட்­டி­னர். அவ­ரைச் சந்­தித்த தரு­ணங்­க­ளை­யும் தங்­கள் நாடு­க­ளின்­மீ­தும் உல­கின்­மீ­தும் அவர் செலுத்­திய தாக்­கத்தை அவர்­கள் நினை­வு­கூர்ந்­த­னர்.

தொடர்ந்து மாறிய உல­கில் எலி­ச­பெத் நிலை­யா­ன­வ­ராக இருந்­தார். அவ­ரில்­லா­மல் நாட்டை அறிந்­தி­ருக்க முடி­யா­த­வர்­கள் உள்­பட பல தலை­முறை பிரிட்­டிஷ் மக்­க­ளுக்கு அவர் ஆறு­த­லும் பெரு­மை­யும் தந்­தார் என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், தலை­ம­கள் ஜில் பைடன் இரு­வ­ரும் கூறி­னர். அவர் விட்­டுச் சென்ற கொடை பிரிட்­டிஷ் வர­லாற்­றி­லும் உல­கத்­தின் கதை­யி­லும் பெரும்­பங்கு வகிக்­கும் என்று இரு­வ­ரும் வரு­ணித்­த­னர்.

ஐக்­கிய நாட்­டுச் செய­லா­ளர் அண்­டோ­னியோ குட்­ட­ரஸ், தமது கருணை, கண்­ணி­யம், அர்ப்­ப­ணிப்பு ஆகி­ய­வற்­றுக்­காக எலி­ச­பெத் அரசி உல­கால் போற்­றப்­பட்­ட­வர் என்று கூறி­னார். காலஞ்­சென்ற அர­சி­ஐக்­கிய நாட்டு அமைப்­பின் நல்ல நண்­பர் என்று அவர் குறிப்­பிட்­டார்.

எலி­ச­பெத் அர­சி­யின் சாதனை அள­வி­லான 70 ஆண்­டு­கால நீண்ட ஆட்சி, அவ­ரது உயர்­பண்­புக்­கும் நம் அனை­வ­ரின்­மீ­தும் அவர் கொண்­டி­ருந்த கடப்­பாட்­டுக்­கும் எடுத்­துக்­காட்டு என்று நியூ­சி­லாந்து பிர­த­மர் ஜெசிந்தா ஆர்­டன் கூறி­னார். நியூ­சி­லாந்து காமன்­வெல்த் நாடு­களில் ஒன்­றா­கும்.

துக்­கத்­தில் இருக்­கும் பிரிட்­டிஷ் மக்­க­ளுக்கு ஆஸ்­தி­ரே­லி­யர்­க­ளின் இத­ய­பூர்­வ­மான அனு­தா­பங்­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்ட ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஆண்­டனி ஆல்­ப­னிஸ், துய­ரம்­தான் அன்­புக்கு நாம் கொடுக்­கும் விலை என்ற எலி­ச­பெத் அரசி கூறிய வார்த்­தை­களில் ஆறு­தல் பெற­வேண்­டும் என்­றார்.

இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி, எலி­ச­பெத் அர­சி­யின் உந்து சக்தி அளிக்­கும் தலை­மைத்­து­வத்­துக்­குப் புக­ழா­ரம் சூட்டி தாம் அவ­ரைச் சந்­தித்த பல்­வேறு தரு­ணங்­களில் அர­சி­யார் அன்­பும் நட்­பும் பாராட்­டி­யதை நினை­வு­கூர்ந்­தார்.

இந்­திய அதி­பர் திரௌ­பதி முர்மு உல­கம் சிறப்­பு­மிக்க ஆளு மையை இழந்­தது என்­றும் ஒரு சகாப்­தம் முடிந்­தது என்­றும் கூறி­னார்.

சீனா­வின் ஆழ்ந்த அனு­தா­பத்­தைத் தெரி­வித்­துக்­கொண்ட சீன அதி­பர் சீ ஜின்­பிங், எலி­ச­பெத் அரசி சீனா­வுக்கு வருகை தந்த முதல் பிரிட்­டிஷ் அரசி என்று குறிப்­பிட்­டார். பிரிட்­ட­னுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யில் நல­மிக்க, நிலை­யான இரு­த­ரப்பு உறவை ஊக்­கு­விக்க மூன்­றாம் சார்ல்ஸ் அர­ச­ரு­டன் பணி­யாற்­றத் தயார் என்­றும் திரு சீ கூறி­னார்.

ஜப்­பா­னிய பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா, எலி­ச­பெத் அரசி உல­கின் அமை­திக்­கும் வளத்­துக்­கும் பெரும்­பங்­காற்­றி­ய­வர் என்று தெரி­வித்­தார்.

பிலிப்­பீன்ஸ் அதி­பர் ஃபெர்டி­னண்ட் மார்­கோஸ் ஜூனி­யர், உண்­மை­யான அர­ச­ரின் பெரும் மாண்­புக்­கும் கட­மை­மீது கொண்ட கடப்­பாட்­டுக்­கும் தம் ஆட்­சி­யில் உள்ள அனை­வ­ரின் மீதான முழு ஈடு­பாட்­டுக்­கும் எலி­ச­பெத் அரசி உல­குக்கு எடுக்­காட்­டா­கத் திகழ்ந்­தார் என்று தெரி­வித்­தார்.

பிரிட்­ட­னுக்கு மலே­சி­யா­வின் அனு­தா­பத்­தைத் தெரி­வித்த வெளி­யு­றவு அமைச்­சர் சைஃபுதின் அப்­துல்லா, எலி­ச­பெத் அர­சியை உன்­ன­த­மான ஆளுமை என்று வரு­ணித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!