எலிசபெத் அரசிக்கு இந்தியாவுடன் இருந்த நிலையான பிணைப்பு

எலிசபெத் அரசியின் மறைவுக்கு இந்தியா ஒரு நாள் துக்கம் அனுசரிக்கும். பல்வேறு இந்திய தலைவர்கள் அரசியாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

காலஞ்­சென்ற எலி­ச­பெத் அரசிக்கும் இந்­தி­யா­வுக்­கும் இடையே மிக நெருக்­க­மான பிணைப்பு இருந்­த­தற்கு அவ­ரது கண­வ­ரும் ஒரு கார­ணம். அர­சி­யின் கண­வ­ரான இள­வ­ர­சர் ஃபிலிப், இந்­தி­யா­வின் கடைசி ஆளு­ந­ராக இருந்த மவுண்ட்­பேட்­டன் பிர­பு­வின் தாய்­மாமா ஆவார்.

இந்­தியா சுதந்­தி­ரம் பெற்று ஐந்து ஆண்­டு­களில் எலி­ச­பெத் அரசி இங்­கி­லாந்து அரி­யணை ஏறி­னார். 1961, 1983, 1997 ஆகிய ஆண்­டு­களில் அவர் இந்­தி­யா­வுக்கு அதி­கா­ர­பூர்வ வருகை மேற்­கொண்­டார். அதிலும் 1961லும் 1997லும் அவர் மேற்­கொண்ட இந்­திய சுற்­றுப்­ப­ய­ணங்களின் பகுதி­யாக சென்னை சென்றிருக்­கி­றார்.

1983ல் இந்­தி­யா­வில் நடை­பெற்ற காமன்­வெல்த் நாடு­க­ளின் தலை­வர்­கள் மாநாட்­டில் கலந்து கொள்ள இந்­தியா சென்­ற எலி­ச­பெத் அரசி, அன்னை தெரே­சா­வுக்கு அவர் பிரிட்­டிஷ் அர­சின் நன்­ம­திப்பு விருதை அளித்­தார்.

எலி­ச­பெத் அரசி கடை­சி­யாக 1997இல் இந்­தி­யா­வுக்கு வருகை மேற்­கொண்­டார். 'கால­னித்­துவ ஆட்­சி­யில் இருந்த சிர­ம­மான கால­கட்­டங்­களை' அவர் அப்­போ­து­ முதல்­மு­றை­யா­கக் குறிப்­பிட்­டார். பல்­லா­யி­ரம் பேர் படு­கொலை செய்­யப்­பட்ட ஜாலி­யான்­வாலா பாக் அதற்கு துய­ர­மிகு உதா­ர­ணம் என்று அவர் தமது உரை­யில் கூறி­னார்.

கடந்­த­கால கசப்பை அந்­தப் பேச்சு மீண்­டும் கிள­றி­யது. ஜாலி­யான்­வாலா பாக் படு­கொலை களுக்கு அரசி மன்­னிப்பு கேட்க வேண்­டும் என்று குரல்­கள் ஒலித்­தன.

1997ஆம் ஆண்டு பய­ணத்­தின்­போது சென்னை சென்ற எலி­ச­பெத் அரசி, நடி­கர் கமல்­ஹா­ச­னின் மரு­த­நா­ய­கம் படப்­பி­டிப்­பைத் தொடங்கி வைத்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!