பிரிட்டன் வளரவும் செழிக்கவும் அரசியார் பாடுபட்டார்: பிரதமர் டிரஸ்

நவீன உலகம் உருவாகத் தூணாக இருந்தவர் அரசியார் என்று புதிய பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் தெரிவித்து உள்ளார். அரசியாரின் மறைவு பிரிட்டனுக்கும் உலகத்திற்கும் பேரதிர்ச்சியைத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

"70 ஆண்டுகால அரச பதவியில் அசாதாரண சாதனைகளை நிகழ்த்தியவர் அரசியார். அவரது கடமை உணர்ச்சி தமக்கும் எராளமான பிரிட்டிஷ் குடிமக்களுக்கும் தூண்டுகோலாக இருந்தது," என்றார் திருவாட்டி டிரஸ்.

பிரிட்டனின் புதிய பிரதமராக திருவாட்டி டிரஸ் இரு நாள்களுக்கு முன்னதாகப் பதவி ஏற்றார்.

"பிரிட்டன் மீது அரசியார் அளவுகடந்த நாட்டுப்பற்று கொண்டிருந்தார். அவரது பதவி காலத்தில் நமது நாடு வளர்ந்தது, செழித்தது. தற்போது பெரியதொரு நாடாக பிரிட்டன் வளர்ந்ததற்கு அவரே காரணம்," என்று பிரதமர் டிரஸ் தமது தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். அப்போது அவர் கறுப்பு நிற உடை அணிந்திருந்தார்.

இந்தக் கடினமான காலத்தில் புதிய அரசருக்கு ஆதரவாக மக்கள் அனைவரும் ஒன்றுதிரளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!