விவியன் பாலகிருஷ்ணன்: எதிர்காலச் சவால்களைச் சமாளிக்க முன்னேற்பாடு உதவும் கிருமிப்பரவலில் பெற்ற அனுபவம், கட்டமைப்புகள் மிக முக்கியம்

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லின்­போது ஏற்­பட்ட அனு­ப­வங்­கள், கிடைத்த பாடங்­கள், அது உரு­வாக்­கிய கட்­ட­மைப்­பு­கள் ஆகி­யவை வருங்­கா­லத் தொற்­று­நோய்­க­ளை­யும் பரு­வ­நிலை மாற்­றம் போன்ற மற்ற சவால்­க­ளை­யும் சமா­ளிக்க சிங்­கப்­பூ­ருக்கு உத­வும் என்று வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் கூறி­யுள்­ளார்.

கடந்த 100 ஆண்­டு­களில் உத்­தே­ச­மாக ஆக மோச­மான பெருந்­­தொற்றை நாம் கடந்­தி­ருக்­கி­றோம் என்ற டாக்­டர் பால­கி­ருஷ்­ணன், இது ஒத்­திகை என்­ப­தும் மேலும் பல, இன்­னும் கடு­மை­யான தொற்­று­நோய்­கள் வர­லாம் என்­ப­தும் தமது சொந்­தக் கருத்து என்று கூறி­னார்.

"அத­னால் கட்­ட­மைப்­பு­களை உரு­வாக்­கு­வது, வளங்­க­ளை­யும் தொண்­டூ­ழி­யர்­க­ளை­யும் திரட்­டு­வது, சேர்ந்து பணி­யாற்­று­வது ஆகி­ய­வற்­றில் நாம் இப்­போது எடுக்­கும் நட­வ­டிக்கை மிக­வும் முக்­கி­யம். நாம் அலட்­சி­ய­மாகி விட முடி­யாது," என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு நிலை­யத்­தில் நடை­பெ­றும் சிங்­கப்­பூர் செஞ்­சி­லுவை சங்­கத்­தின் மனி­தா­பி­மா­னப் பணி மாநாட்­டில் அவர் நேற்று கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார். மாநாடு ஏழா­வது முறை­யாக நடை­பெற்று வரு­கிறது.

'கொவிட்-19 பர­வ­லுக்கு எதி­ரான மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­கள்: கவ­லை­யும் நம்­பிக்­கை­யும்' எனும் கருப்­பொ­ருள் கொண்ட மாநாட்­டில் கிரு­மித்­தொற்­றின் உட­னடி விளை­வு­கள், அக்­கா­ல­கட்­டத்­தில் மக்­களும் அமைப்­பு­களும் உத­விய முறை ஆகி­யவை விவா­திக்­கப்­பட்­டன. மனி­தா­பி­மான, சுகா­தா­ரத் துறைக­ளைச் சேர்ந்த 300க்கும் அதி­க­மா­ன­வர்­கள் மாநாட்­டில் கலந்­து­கொண்­ட­னர்.

சிங்­கப்­பூர் மெல்ல கிரு­மிப்­ப­ர­வ­லி­லி­ருந்து மீண்டு வரும் நிலை­யில் மேலும் பல சவால்­கள் வரும் என்று டாக்­டர் பால­கி­ருஷ்­ணன் கூறி­னார். பரு­வ­நிலை மாற்­றம், இயற்­கைப் பேரி­டர், மியன்­மார், இலங்­கை­யில் அர­சி­யல் நெருக்­கடி, உக்­ரேன் நெருக்­கடி ஆகி­ய­வற்றை அவர் குறிப்­பிட்­டார். உல­கம், இன்­னும் ஆபத்­தான, குழப்­ப­மான இடத்­தில் உள்­ளது என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!