‘அளவுக்கு அதிகமான பயணச்சீட்டுகள் விற்கப்படுவது ஆராயப்படவேண்டும்’

அள­வுக்­க­தி­க­மான பய­ணச்­சீட்­டு­கள் விற்­கப்­ப­டு­வது ஆரா­யப்­ப­ட­வேண்­டும் என்று சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கத்­தின் தலை­வர் மெல்­வின் யோங் கூறி­யுள்­ளார். நேற்று தமது ஃபேஸ்புக் பதி­வில் அவர் இதைக் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இம்­மா­தம் நான்­காம் தேதி­யன்று பய­ணச்­சீட்­டு­களை வாங்­கி­யி­ருந்த 100க்கும் அதி­க­மான பய­ணி­க­ளுக்கு ஜென்­டிங் டிரீம் சொகு­சுக் கப்­ப­லுக்­குள் நுழைய அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. கப்­ப­லில் அதி­க­பட்ச பய­ணச்­சீட்­டு­க­ளுக்­கும் மேலா­னவை விற்­கப்­பட்­டது இதற்­குக் கார­ணம்.

கிள்­ளான் துறை­மு­கம், பினாங்கு ஆகி­ய­வற்­றுக்­குப் புறப்­ப­ட­வி­ருந்த சொகு­சுக் கப்­ப­லில் அதி­பட்­ச­மாக 3,352 பேர் பய­ணம் செய்­ய­லாம்.

இந்த விவ­கா­ரத்­தின் தொடர்­பில் திரு மெல்­வின் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டார்.

அள­வுக்­க­தி­க­மான பய­ணச்­சீட்டு­கள் விற்­கப்­ப­டு­வ­தைத் தவிர்ப்­பது, அவ்­வாறு நிகழ்ந்­தால் பாதிக்­கப்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஈடு­கட்­டு­வது ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் தற்­போது விதி­மு­றை­கள் இல்லை என்­ப­தைத் திரு யோங் சுட்­டி­னார்.

பய­ணச்­சீட்டு வாங்­கும்­போது அதற்­கான ஒப்­பந்­தத்­தில் இடம்­பெ­றும் நிபந்­த­னை­கள், காப்­பு­று­தித் திட்­டங்­கள் போன்­ற­வற்­றையே வாடிக்­கை­யா­ளர்­கள் சார்ந்­தி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

அவை, வாடிக்­கை­யா­ளர்­க­ளின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு ஏற்­ற­வாறு அவர்­க­ளுக்கு சாத்­தி­ய­மாக இல்­லா­மல் இருக்­க­லாம் என்­றும் அவர் சொன்­னார்.

"அள­வுக்­க­தி­க­மான பய­ணச்­சீட்டு­கள் வாங்­கப்­ப­டு­வதை ஆராய்ந்து சிங்­கப்­பூ­ரின் சுற்­றுப்­ப­யண, உப­ச­ரிப்­புத் துறை­களில் வாடிக்­கை­யா­ளர்­களை எவ்­வாறு பாது­காக்­க­லாம் என்­பதை அதி­கா­ரி­களும் சம்­பந்­தப்­பட்ட சேவை­களை வழங்­கு­வோ­ரும் பரி­சீ­லனை செய்ய இது சரி­யான தரு­ண­மாக இருக்­க­லாம்," என்று திரு யோங் கூறி­னார்.

அமெ­ரிக்கா, ஐரோப்பா ஆகிய பகு­தி­களில் இருப்­ப­தைப் போல் பாதிக்­கப்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­களுக்கு ஈடு­கட்­டு­வ­தன் தொடர்­பில் விதி­மு­றை­கள் வரை­வதை அதி­கா­ரி­கள் கருத்­தில்ெ­கொள்­ள­லாம் என்­றும் அவர் சொன்­னார். சுற்­றுப்­ப­யண, உப­ச­ரிப்­புத் துறை­களில் சில வாடிக்­கை­யா­ளர்­கள் வரா­மல் இருப்­ப­தற்­கான சாத்­தி­யம் இருப்­ப­தால் அள­வுக்­க­தி­க­மான நுழை­வுச்­சீட்­டு­கள் விற்­கப்­ப­டு­வது உண்டு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!