முறைத்துப் பார்த்ததால் கலவரம்: ஆறு பேர் கைது

கலவரத்தில் ஈடுபட்ட ஆறு பேரை காவல் துறை கைது செய்துள்ளது. சந்தேக நபர்கள் 16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். 
பேஃபிரான்ட் அவென்யு வட்டாரத்தில் நேற்று காலை ஆறு மணியளவில் ஆடவர் ஒருவருக்கும் ஆறு பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதன் தொடர்பில் காவல் துறையினருக்கு அழைப்பு வந்ததது. 

20 வயதான ஆடவருக்கு முகத்திலும் கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன. அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். 
ஆறு பேர் அடங்கிய கும்பலை காவல் துறை இரண்டு மணி நேரத்தில் வளைத்துப் பிடித்தது. 

ஒருவரையொருவர் உற்றுப் பார்த்து முறைத்துக் கொண்டதால், கைகலப்பு ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் குறிப்பிட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களின் மீது கலவரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படும். 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!