வீடு: மக்களின் விருப்பங்கள், கவலைகள் விவாதிக்கப்படும்

‘கட்டமைப்பு’ தொடர்பான மக்கள் ஈடுபாட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் கருத்து

சிங்­கப்­பூர் தன்­னு­டைய வருங்­கால தலை­மு­றை­யி­ன­ருக்­காக நிலத்­தை­யும் வளங்­க­ளை­யும் போதிய அள­வுக்குப் பாது­காத்து வைக்­கிறது.

அதே­வே­ளை­யில், வரும் ஆண்டு­களில் மக்­க­ளுக்கு வீடு­களை வழங்­க­வும் அது திட்­ட­மி­டு­கிறது.

இந்த நிலை­யில், பொது வீடமைப்பு தொடர்­பான சிங்­கப்­பூரர்­க­ளின் விருப்­பங்­களை, கவலை­களைப் பற்றி விவா­திக்க வேண்­டிய தேவை இருக்­கிறது என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்­தார்.

அதோடு, சமூ­கத்­தில் ஏற்­பட்டு வரும் மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப வீடு­கள் தொடர்­பில் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டம் அர­சாங்­கம் கொண்­டி­ருக்­கும் கடப்­பா­டு­களும் எப்­படி பரி­ண­மிக்க வேண்­டும் என்­பது குறித்­தும் விவா­திக்க வேண்­டிய தேவை இருக்­கிறது என்­றார் அவர்.

மேக்ஸ்­வெல் ரோட்­டில் உள்ள யுஆர்ஏ சென்­ட­ரில் நேற்று நடந்த பொது­மக்­கள் ஈடு­பாட்டு நிகழ்ச்சி ஒன்­றில் அமைச்­சர் பேசி­னார்.

துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் கடந்த ஜூன் மாதம் புதிய சமூ­கக் கட்­ட­மைப்­பான ‘முன்­னே­றும் சிங்­கப்­பூர்’ என்ற இயக்­கத்தைத் தொடங்­கி­வைத்­தார்.

அந்த இயக்­கத்­தின் ஆறு தூண்­களில் ‘கட்­ட­மைப்பு’ என்­பது ஒரு தூணா­கும். கட்­ட­மைப்பு தொடர்­பிலான கலந்­து­ரை­யா­டல்­கள் நேற்று தொடங்­கின. அதில் பொது­மக்­கள் 180 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

அவர்­க­ளி­டம் உரை­யாற்­றிய அமைச்­சர், நம்­ கட­மை­கள், பொறுப்பு­கள், விருப்­பங்­கள், எதிர்­பார்ப்­பு­கள் ஆகி­ய­வற்­றைப் பற்றி பேச வேண்டி­யது உண்­மை­யி­லேயே மிக முக்­கி­ய­மா­னது என்­றார்.

“அவை நாம் நம்­மு­டைய வளங்­களை எப்­படி பயன்­ப­டுத்­த­லாம் என்­ப­தற்­கான வழியைக் காட்­டும்.

“பிறகு நம்­மு­டைய வீட­மைப்புக் கொள்­கை­களை முழு­மை­யாக உரு­வாக்­கும் வழி­யா­க­வும் சிங்­கப்­பூ­ரின் நிலப் பய­னீட்­டுக்குத் திட்­ட­மி­டும் வழி­யா­க­வும் அவை இருக்­கும்.

“அவை எல்­லாம் வழியில் மாற்­றத்­திற்­கான கார­ணங்­க­ளா­க­வும் திக­ழும்,” என்­றார் அவர்.

“சிங்­கப்­பூர் வீட­மைப்புக் கொள்கை என்­பது சமூ­கக் கொள்­கை­யாக இருக்­கிறது என்­பதே இதற்­கான கார­ணம். அத்­த­கைய கொள்கை கள், வெறும் உள்­கட்­ட­மைப்பு மேம்­பா­டு­களில் கவ­னத்­தைச் செலுத்­தா­மல் சமூ­கம், மக்­க­ளின் வாழ்­வில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­ப­வை­யாக இருக்­கின்றன,” என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளைப் பொறுத்­த­வரை வீடு என்­பது முக்­கி­ய­மான ஓர் அம்­சம் என்­பதை தான் ஏற்­றுக்­கொள்­வ­தாக கூறிய திரு லீ, கட்­டு­மான தாம­தங்­கள், வீவக வீடு­க­ளுக்­கு­க் காத்­தி­ருக்­கும் நேரம், வீட்டு விலை தாக்குப்­பி­டிக்­கும் அள­வில் இருக்­குமா போன்­றவை மக்­கள் மன­தில் முக்­கிய இடத்­தைப் பிடித்து இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

உட­னடி சவால்­க­ளைச் சமாளிக் கும் வகை­யில் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம், கட்­டு­மான தாம­தங்­களைக் குறைத்து வரு­கிறது. வீடு­கள் விரை­வாக கிடைக்க அது முயற்­சி­களை முடுக்­கி­விட்டு உள்­ளது. 2021 முதல் 2025 வரை 100,000 புதிய வீடு­களை விற் பனைக்குக் கொடுப்­பது அதன் இலக்­காக இருக்­கிறது என்­றார்.

தொடர்ந்து சொத்துச் சந்தையை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து, அது நிலை­யாக, கட்­டிக்­காக்­கக் கூடிய வகை­யில் இருப்­பதை அர­சாங்­கம் உறு­திப்­ப­டுத்­தும்.

வீட­மைப்பு தொடர்­பான நம்­ சமூ­கக் கோட்பாடு, நிலை­யான ஒன்று அல்ல. நிலை­யாக அது இருந்­த­தும் இல்லை; இருக்­கப் போவ­தும் இல்லை. சூழ்­நிலை மாறும்­போது, சமூ­கம் பரி­ண­மிக்கும்போது அதற்­கேற்ப நம் கொள்­கை­களும் தொடர்ந்து பரி­ண­மித்து வர­வேண்டும் என்றார் அமைச்­சர்.

நேற்றைய நிகழ்ச்­சி­யைப் போல டிசம்­பர் வரை கிட்­டத்­தட்ட 20 நிகழ்ச்­சி­களும் சாலைக்காட்­சி­களும் நடக்­க­வி­ருக்­கின்­றன.

சாலைக்­காட்­சி­கள் உட்­லண்ட்ஸ் சிவிக் சென்­ட­ரில் அக்­டோ­பர் 8ஆம் தேதி தொடங்­கும். பிறகு ‘அவர் தெம்­ப­னிஸ் ஹப்’, தோ பாயோ­வில் உள்ள வீவக மையம் ஆகி­ய­வற்­றில் நடக்­கும். பொது வீட­மைப்பு பற்றி பொது­மக்­க­ளின் கருத்­து­கள், யோச­னை­களைத் திரட்­டு­வ­தற்­காக அக்­டோ­பர் 8 முதல் நவம்­பர் 27ஆம் தேதி வரை கருத்­தெ­டுப்பு நடக்­கும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!