இரட்­டைப் பட்­டப்­ப­டிப்­பில் உன்­ன­தத் தேர்ச்சி

‘ஸ்டெம்’ எனப்­படும் அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தம் துறை­களில் பெண்­கள் முன்­னிலை வகிக்க வேண்­டும் என்ற எண்­ணம் கொண்­ட­வர் சுரபி மாலனி. 23 வய­தான இவர் ‘தொழில்­நுட்­பத்­தில் தலை­சி­றந்த எஸ்ஜி 100 பெண்­கள்’ பிரி­வில் ‘தொழில்­நுட்­பத்­தில் முதல்­தர 18 இளம்­பெண்­கள்’ பட்­டி­ய­லில் இடம்­பி­டித்­துள்­ளார்.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­

க­லைக்­க­ழ­க சமூக அறி­வி­யல் துறை­யி­லும் பொறி­யி­யல் துறை­யி­லும் இரட்­டைப் பட்­டப்­ப­டிப்பு மேற்­கொண்ட இவர் இரண்­டி­லுமே உன்­ன­தத் தேர்ச்சி பெற்­றுள்­ளார்.

பட்­டப்­ப­டிப்­புப் பிரி­வில் சிண்டா உன்­னத விருது வென்­றுள்ள இவர், சிண்­டா­வின் ‘வாலே­டிக்­டா­ரி­யன்’ ஆக­வும் நிய­ம­னம் பெற்­றி­ருந்­தார்.

நன்­யாங் தொழில்­நுட்பப் பல்­

க­லைக்­க­ழ­கத்­தில் ‘ஸ்டெம்’ தொடர்­பான வாய்ப்­பு­க­ளை பெண்­கள் அறிந்­து­கொள்ள வேண்­டும் என்ற நோக்­கில் ‘தொழில்­நுட்­பத்­தில் பெண்­கள்’ என்­னும் குழு­வின் இணை நிறு­வ­ன­ராக இருந்­தார். இக்­கு­ழு­வு­டன் சேர்ந்து தொழில்­நுட்­பம் தொடர்­பான பல்­வேறு வழி­காட்­டு­தல் திட்­டங்­கள், இணை­யம்­வழி கருத்­த­ரங்­கு­கள், கலந்­து­ரை­யா­டல்­கள் உள்­ளிட்ட பல நிகழ்­வு­களை ஒருங்­கி­ணைத்­துள்­ளார்.

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பெண் பொறி­யா­ளர்­கள் சங்­கத்­தின் செய­ ல­வைக் குழு­வி­லும் பணி­பு­ரிந்­தார்.

கணினி அறி­வி­யல் துறை மாண­வி­யாக தன்­னு­டைய அனு­ப­வங்­க­ளை­யும் கருத்­துக­ளை­யும் உல­க­ளா­விய இணை­ய­ம்வழி கருத்­த­ரங்­கில் பகிர்ந்­து­கொண்­டுள்­ளார்.

தொண்­டூ­ழி­யத்­தில் நாட்­ட­ம் உள்ள இவர் ‘யூத் கார்ப்ஸ்’ என்­னும் அமைப்­பில் இணைந்து சிறப்­புத் தேவை­க­ளு­டைய இளை­யர்­க ளுக்கு உதவி செய்து வரு­கி­றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!