11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை

தன்னுடைய 11 வயது மகளை ஓர் ஆண்டுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்த ஆடவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும் 12 பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த 40 வயது ஆடவருக்கு தண்டனை விதிக்கும்போது மொத்தம் பத்து  பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டன. 

பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை பாதுகாக்க, குற்றவாளியின் பெயர் வெளியிட தடை உள்ளது.

2019ல் சிறுமி பத்து வயதாக இருந்தபோது, ஆடவர் அவளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கினார். தான் பிடிப்படப் போவதில்லை என்று நம்பிய ஆடவர், மகளை வாரந்தோறும் பாலியல் பலாத்காரம் செய்தார். இருவரும் தனியாக இருந்தபோதும் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தூங்கிய பின்னர், அவர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

தனது தந்தை தன்னை பலமுறை தவறான முறையில் தொடுவதாக சிறுமி தன்னுடைய தாயாரிடன் கூறியிருந்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

மகளுடன் பாலியல் செயலில் ஈடுபட்டிருந்தபோதுதான், குற்றவாளி தன்னுடைய மனைவியிடன் கையும் களவுமாகப் பிடிப்பட்டார். 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!