கொண்டோலாவில் சிக்கிய ஊழியரை மீட்ட குடிமைத் தற்காப்புப் படை

அடுக்குமாடிக் கட்டடத்தில் வேலை பார்ப்பதற்காக ஊழியர்கள் பயன்படுத்தும் 'கொண்டோலா' மின்தூக்கியில் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் சிக்கிய ஊழியரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

புளோக் 104, டெக் வை லேனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் (வீவக) கட்டடத்தின் எட்டாவது மாடிக்கும் ஒன்பதாவது மாடிக்கும் இடையே நின்ற கொண்டோலாவிலிருந்து ஊழியர் வெளியேற முடியாமல் தவித்தார்.

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) மாலை 5.30 மணியளவில் தகவல் கிடைத்துவுடன் புக்கிட் பாத்தோக் தீயணைப்பு நிலையத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

கொண்டோலாவையும் ஊழியரின் நிலையையும் ஆராய்ந்தபின்னர் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியின் காணொளியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பதிவேற்றியிருந்தது.

படையின் 'டார்ட்' சிறப்பு மின்னல் படையைச் சேர்ந்த அதிகாரிகள் கட்டடத்தின் கூரையிலிருந்து பிரத்தியேக கயிறுகளையும் கம்பிகளையும் கொண்டு கீழே இறங்கினர். இரு அதிகாரிகள்

கொண்டோலாவில் இறங்கினர். ஒரு அதிகாரி ஊழியரைத் தம் உடலுடன் பாதுகாப்பாக இணைத்துக்கொண்டு அவரை கவனமாகத் தரையில் இறக்கினார்.

ஊழியருக்கு எந்த காயங்களும் இல்லை என்பதை குடிமைத் தற்காப்புப் படையின் முதலுதவியாளர்கள் உறுதி செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!