குவாங் வாய் ஷு மருத்துவமனையின் இரண்டாம் தாதிமை இல்லம் திறப்பு

குவாங் வாய் ஷு மருத்துவமனை சனிக்கிழமையன்று (1 அக்டோபர்) தனது இரண்டாவது தாதிமை இல்லத்தை பொத்தோங் பாசிரில் திறந்துள்ளது.

அங்கு வசிக்கும் அதிக எண்ணிக்கையிலான முதியோரின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் அது திறக்கப்பட்டுள்ளது.

முதியோரில் பலருக்குத் தாதிமை, பகல்நேரப் பராமரிப்பு போன்ற சேவைகள் அதிகம் தேவைப்படுகின்றன.

அந்தச் சேவைகளைப் புதிய தாதிமை இல்லம் வழங்கும் என்று இந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஓவ் சீ சுங் கூறினார்.

நினைவிழப்புக் குறைபாடு உள்ளோரைப் பராமரிப்பதில் சிறப்பு ஆற்றலைப் புதிய தாதிமை இல்லம் கொண்டிருக்கும்.

இது, பொது மருத்துவமனைகளிலிருந்து அத்தகைய நோயாளிகளைப் பெற்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் என்று மருத்துவமனையின் தலைவரான பேட்ரிக் லீ புதிய இல்லத்தின் திறப்பு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த தாதியர், இந்தப் புதிய இல்லத்தைச் சேர்ந்த ஊழியர்களுடன் சேர்ந்து செயல்பட்டு முதியவர்களை எப்படி கவனித்துக்கொள்வது என்பதன் தொடர்பில் பயிற்சியளிப்பார்கள்.

இந்தப் பயிற்சி 2023ஆம் ஆண்டு ஜனவரி வரை நடக்கும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

குவாங் வாய் ஷு மருத்துவமனையின் 112வது ஆண்டுவிழாவுடன் சேர்ந்து அமையும் வகையில் புதிய இல்லம் திறக்கப்பட்டுள்ளது.

இதில் 438 படுக்கைகள் உள்ளன.

அவற்றையும் சேர்த்து இந்த மருத்துவமனையின் ஆறு முதியோர் பராமரிப்பு நிலையங்களில் மொத்தம் 1,200 இடங்கள் இருக்கும்.

மருத்துவமனையின் மற்றொரு தாதிமை இல்லம் சிராங்கூன் ரோட்டில் செயல்படுகிறது.

சுகாதார அமைச்சர் ஓங் யி காங் புதிய இல்லத்தின் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

மருத்துவமனைகளின் சுமைகளைக் குறைக்க புதிய இல்லம் உதவுகிறது; இதன்வழி கொவிட்-19க்கு எதிரான தேசிய போராட்டத்தில் இந்த இல்லம் புதிய ஊக்குவிப்பை வழங்குகிறது என்றார் அமைச்சர் ஓங்.

சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைந்து வருகிறது.

அதைச் சமாளிப்பதில் நீண்ட நெடுங்காலம் இந்தப் புதிய இல்லம் உதவும் என்றும் திரு ஓங் குறிப்பிட்டார்.

அருகே இருக்கும் செயின்ட் ஆண்ட்ருஸ் வில்லேஜில் உள்ள பள்ளிக்கூட மாணவர்களையும் சேர்த்துக்கொண்டு கேளிக்கை விளையாட்டுகள், வெளிப்புற பெருநடை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இளையோரையும் முதியோரையும் புதிய பொத்தோங் பாசிர் தாதிமை இல்லம் ஈடுபடுத்துகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!