புதிய தாதிமை இல்லம் திறப்பு பொத்தோங் பாசிர் முதியோர் பராமரிப்புக்காக குவாங் வாய் ஷு மருத்துவமனை ஏற்பாடு

குவாங் வாய் ஷு மருத்­து­வ­மனை நேற்று தனது இரண்­டா­வது தாதிமை இல்­லத்தை பொத்­தோங் பாசி­ரில் திறந்­தது.

அங்கு வசிக்­கும் அதிக எண்­ணிக்­கை­யி­லான முதி­யோரின் தேவை­களை நிறை­வேற்­றும் நோக்­கத்­து­டன் அது திறக்­கப்­பட்டு இருக்­கிறது. அத்­த­கைய முதி­ய­வர்­களில் பல­ருக்குத் தாதிமை, பகல்­நேர பரா­ம­ரிப்பு போன்ற சேவை­கள் அதிகம் தேவைப்­ப­டு­கின்றன.

அந்­தச் சேவை­களைப் புதிய தாதிமை இல்­லம் வழங்­கும் என்று இந்த மருத்­து­வ­ம­னை­யின் தலைமை நிர்­வாக அதி­காரி டாக்­டர் ஓவ் சீ சுங் கூறி­னார். நினை­வி­ழப்புக் குறை­பாடு உள்­ளோரைப் பரா­ம­ரிப்­பதில் சிறப்பு ஆற்­றலை புதிய தாதிமை இல்லம் கொண்­டி­ருக்­கும்.

அது, பொது மருத்­து­வ­ம­னை­களில் இருந்து அத்­த­கைய நோயாளி­களைப் பெற்று அவர்­க­ளுக்­கு சிகிச்சை அளிக்­கும் என்று மருத்­து­வ­ம­னை­யின் தலை­வ­ரான பேட்­ரிக் லீ நேற்­றைய புதிய இல்ல திறப்பு நிகழ்ச்­சி­யில் தெரி­வித்­தார்.

டான் டோக் செங் மருத்­து­வ­மனை­யைச் சேர்ந்த தாதி­யர்­கள், அந்­தப் புதிய இல்­லத்­தைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளு­டன் சேர்ந்து செயல்­பட்டு முதி­ய­வர்­களை எப்­படி எல்­லாம் கவ­னித்­துக்கொள்­வது என்­பதன் தொடர்­பில் பயிற்சி அளிப்­பார்­கள். இந்­தப் பயிற்சி 2023 ஜனவரி வரை நடக்­கும் என்­றும் திரு லீ குறிப்­பிட்­டார்.

குவாங் வாய் ஷு மருத்­து­வ­மனை­யின் 112ஆவது ஆண்­டு­விழா­வு­டன் சேர்ந்து அமை­யும் வகை­யில் புதிய இல்­லம் திறக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய தாதிமை இல்­லத்­தில் 438 படுக்­கை­கள் உள்­ளன. அவற்­றை­யும் சேர்த்து இந்த மருத்­து­வ­ம­னை­யின் ஆறு முதி­யோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களில் மொத்­தம் 1,200 இடங்­கள் இருக்­கும்.

இந்த மருத்­து­வ­ம­னை­யின் மற்றொரு தாதிமை இல்­லம் சிராங்­கூன் சாலையில் செயல்­ப­டு­கிறது.

சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்­றைய புதிய இல்லத் திறப்பு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார். மருத்­து­வ­ம­னை­க­ளின் சுமை­களைக் குறைக்க இந்­தப் புதிய தாதிமை இல்­லம் உத­வு­கிறது. இதன்வழி கொவிட்-19க்கு எதி­ரான தேசிய போராட்­டத்­தில் இந்த இல்­லம் புதிய ஊக்­கு­விப்பை வழங்­கு­கிறது என்றார் அமைச்­சர்.

சிங்­கப்­பூ­ரின் மக்­கள்­தொகை மூப்­ப­டைந்து வரு­கிறது. அதைச் சமாளிப்பதில் நீண்ட நெடுங்­கா­லம் இந்­தப் புதிய இல்­லம் உத­வும் என்­றும் அமைச்சர் குறிப்­பிட்­டார்.

அருகே இருக்­கும் செயின்ட் ஆண்ட்­ருஸ் வில்­லே­ஜில் உள்ள பள்­ளிக்­கூட மாண­வர்­க­ளை­யும் சேர்த்­துக்கொண்டு கேளிக்கை விளை­யாட்­டு­கள், வெளிப்­புறப் பெரு­நடை நிகழ்ச்­சி­கள் போன்­ற­வற்­றில் இளை­யோ­ரை­யும் முதி­யோ­ரை­யும் புதிய பொத்தோங் பாசிர் தாதிமை இல்­லம் ஈடு­ப­டுத்­து­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!