அக்டோபர் மாதம் முதல் பாதியில் சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது. காலை, நண்பகல் ஆகிய நேரங்களில் மழை கொட்டும் எனக் கூறப்பட்டது.
பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சில நாள்களில் 23 டிகிரி செல்சியசுக்கு குறையும் எனக் கூறப்பட்டது.
இம்மாதம் முதல் இரண்டு வாரங்களில் வெப்பநிலை சற்று தணிந்திருக்கும்.