சுகா­தார பரா­ம­ரிப்­புத் துறை வேலை

ஆட்­டி­சம் குறை­பாடு உள்ள பெரி­ய­வர்­க­ளுக்கு புதிய உடன்­பாடு மூலம் உற்­சா­கம்

ஐஎச்­எச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு சிங்­கப்­பூர் அமைப்­பின் நிறு­வ­னத் திட்­டப் பிரி­வில் பணி­யாற்­றும் 22 வயது வில்­லி­யம் லோ, நோயா­ளி­யின் பதி­வு­க­ளில் ஏதே­னும் தவ­று­கள் உள்­ளதா என்று சோதிப்­பார். ஆட்­டி­சம் குறை­பாடு உள்ள அவ­ருக்கு அமை­தி­யான அலு­வ­லக சூழல் பிடிக்­கும். அப்­போ­து­தான் தனது வேலை­யில் அதிக கவ­னம் செலுத்த முடி­யும் என்று கூறு­கி­றார்.

ஐஎச்­எச் சிங்­கப்­பூர் அமைப்­பும் லாப­நோக்­க­மற்ற அமைப்­பான ஆட்­டி­சம் வள­நி­லை­ய­மும் 2019ல் செய்து­கொண்ட உடன்­பாட்­டின் விளை­வாக சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் வேலை கிடைத்த ஆட்­டி­சம் குறை­பா­டு­டைய 15 பெரி­ய­வர்­களில் திரு லோவும் ஒரு­வர்.

மேற்­கூ­றப்­பட்ட இரு அமைப்­பு­கள் மேலும் மூன்று ஆண்­டு­க­ளுக்கு நீடிக்­கக்­கூ­டிய உடன்­பாட்­டில் நேற்று கையெ­ழுத்­திட்­ட­தன் மூலம் மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­றும் ஆட்­டி­சம் குறை­பா­டு­டைய ஊழி­யர் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்க உள்­ளது.

அதன் வழி, ஆட்­டி­சம் உள்­ள­வர்­கள் தகுந்த பயிற்­சி­களை பெற்று, அவர்­க­ளின் திற­னுக்­கேற்ப ஐஎச்­எச் சிங்­கப்­பூர் மருத்­து­வ­ம­னை­களி­லும் மருந்­த­கங்­க­ளி­லும் பணியமர்த்­தப்­ப­டு­வார்­கள்.

"அப்­படி என்­றால் இன்­னும் அதி­க­மான வேலை­கள் ஆட்­டி­சம் உள்­ள­வர்­க­ளுக்­குக் காத்­தி­ருக்­கின்­றன," என்­றார் ஆட்­டி­சம் வள­நிலை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் ஜெஸ்­லின் லிம்.

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய தனி­யார் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வழங்கு நரான ஐஎச்­எச் மவுண்ட் எலி­ச­பெத் ஆர்ச்­சர்ட், நொவினா உட்­பட நான்கு மருத்­து­வ­ம­னை­களை நிர்­வகிக்­கிறது.

"சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் எங்­க­ளின் ஊழி­யர் எண்­ணிக்கை மிகக் குறைவு. இரு வகை­யான ஊழி­யர்­கள் எங்­க­ளி­டம் உள்­ள­னர். முன்­க­ளப் பணி­யா­ளர்­கள். கட்­ட­ணப் பட்­டி­ய­லைத் தயார் செய்­வது, நோயா­ளிப் பதி­வு­களை நிர்­வ­கிப்­பது என பின்­ன­ணி­யில் இருந்து வேலை செய்ய பலர் தேவைப்­ப­டு­கின்­ற­னர்," என்­றார் ஐஎச்­எச் சிங்­கப்­பூர் அமைப்­பின் தலைமை நிர்­வாகி டாக்­டர் பிரேம் குமார் நாயர்.

ஐஎச்­எச் சிங்­கப்­பூர் அமைப்­புக்­கும் ஆட்­டி­சம் வள­நி­லை­யத்­கும் இடை­யி­லான உடன்­பாடு நேற்று லெங்­கோக் பாரு­வில் உள்ள எனே­பலிங் வில்­லேஜ்­ஜில் அதி­பர் ஹலிமா யாக்­கோப் முன்­னி­லை­யில் கையெ­ழுத்­தா­னது.

இந்த உடன்­பாட்­டின் மூலம் ஆட்­டி­சம் வள­நி­லை­யம் இப்­போது ஆட்­டி­சம் உள்ள இன்­னும் அதி­க­மான தனி­ந­பர்­க­ளுக்­குத் தேவை­யான பயிற்­சி­ய­ளித்து, அவர்­களை சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வேலை­க­ளுக்­குத் தயார்ப்­ப­டுத்­தும்.

இரண்டு மவுண்ட் எலி­ச­பெத் மருத்­து­வ­ம­னை­களும் இணைந்து ஆட்­டி­சம் வள­நி­லை­யத்­துக்கு $100,000 நன்­கொடை அளித்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!