அரசு மருத்­து­வ­ம­னை­களில் 90% இளம் உள்­ளூர் மருத்­து­வர்­கள்

சிங்­கப்­பூ­ரில் உள்ள அர­சாங்க சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மங்­களில் ஒவ்­வோர் ஆண்­டும் வேலைக்கு சேர்க்­கப்­படும் இளைய மருத்­து­வர்­களில் 90%க்கும் மேற்­பட்­ட­வர்­கள் சிங்­கப்­பூ­ரர்­கள் என்று விளக்­கம் அளிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தக் குழு­மங்­க­ளின் கட்­டுப்­பாட்டை வைத்­தி­ருக்­கும் எம்­ஓ­எச் ஹோல்­டிங்ஸ் அமைப்பு இதைத் தெரி­வித்­துள்­ளது.

இந்­திய மருத்­து­வர்­களை சிங்­கப்­பூ­ரில் வேலைக்கு அமர்த்­து­வதன் தொடர்­பில் இணை­யத்­தில் சர்ச்சை ஏற்­பட்­டதை அடுத்து, நிறு­வ­னம் விளக்­கம் தந்­தது. சிங்­கப்­பூ­ரில் உள்ள மூன்று மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் ஏதா­வது ஒன்­றில் பட்­டம்­பெற்­ற­வர்­கள் அல்­லது அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட வெளி­நாட்­டுப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் படித்த சிங்­கப்­பூர் மருத்­து­வர்­கள், குழு­மங்­களில் வேலைக்­குச் சேர்க்­கப்­ப­டு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

இந்­திய மருத்­து­வர்­க­ளைப் பணி­யில் சேர்க்­கும் சேவை­களை வழங்­கும் குத்­த­கை­யில் பங்­கேற்­கும்­படி ஊழி­யர்­சேர்ப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு கடந்த 6ஆம் தேதி எம்­ஓ­எச் ஹோல்­டிங்ஸ் அழைப்பு விடுத்­தி­ருந்­தது. சிங்­கப்­பூ­ரின் அர­சாங்க மருத்­து­வ­ம­னை­க­ளின் தேவை­க­ளைச் சமா­ளிக்க ஒவ்­வோர் ஆண்­டும் 700 இளம் மருத்­து­வர்­கள் பணி­யில் சேர்க்­கப்­ப­டு­வ­தா­க அமைப்­பின் பேச்­சா­ளர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!