கைவண்ணத்தில் உயிர்பெறும் கலைவண்ணம்

பேசும் சித்திரம்வழி தழைக்கட்டும் தமிழ்மொழி

தமிழ்மொழியை இளை­யர்­க­ளுக்­குப் புத்­தாக்க வடி­வில் கொண்­டு­செல்ல வேண்­டும் என 27 வயது ராம் பிர­சாத் செல்­வ­ராஜ் விரும்­பு­கி­றார். கடந்த ஈராண்­டு­க­ளாக தனது இன்ஸ்­ட­கி­ராம் சமூக ஊட­கத் தளத்­தில் கேலிச்­சித்­திர, திரைப்­ப­டக் கதா­பாத்­தி­ரங்­கள் போன்­ற­வற்றை வரைந்து பதிவு செய்து வரு­கி­றார் இவர். இவரின் பெரும்­பா­லான மின்னிலக்க வரைகலைப் படைப்­பு­களில் தமிழ் சார்ந்த அம்­சங்­கள் அடங்கும்.

பாலர் பரு­வத்­தி­லி­ருந்து தன் தாயா­ரின் கதை­க­ளைக் கேட்டு வளர்ந்த இவர், தான் கேட்ட கதை­க­ளுக்கு உயிர் கொடுக்க வேண்­டும் என்­ப­தற்­காக முதன்­மு­த­லில் வரை­யத் தொடங்­கி­னார். வரை­கலை மீதும் தமிழ்­மொழி மீதும் ஆர்­வம் அதி­க­ரிக்க, திரைப்­ப­டக் கதா­நா­ய­கர்­க­ளை­யும் கேலிச்­சித்­திர கதை­மாந்­த­ரை­யும் வரை­யும்­போது இடை­யி­டையே தமிழ் பழ­மொ­ழி­க­ளை­யும் தமி­ழில் உள்ள தொடர்­கள், எழுத்­து­க­ளை­யும் இணைக்க ஆரம்­பித்­தார் ராம்.

"இளை­யர்­க­ளுக்கு நம் தமிழ்­மொழி, தமி­ழர் பண்­பாடு, வர­லாறு ஆகி­ய­வற்­றைப் புரி­ய­வைப்­பது முக்­கி­யம். தமிழ்­மொ­ழிப் புழக்­கத்தை நம் அன்­றாட வாழ்க்­கை­யில் குறைத்­துக்­கொண்­டால், நம் மொழி மறைந்து­வி­டுமோ என்ற அச்­சம் என்­னுள் எழுந்­தது. எனவே, இளை­யர்­க­ளைச் சென்­ற­டை­வ­தில் எனது கவ­னத்­தைச் செலுத்­தி­னேன்," என்று கூறுகிறார் ராம்.

இளை­யர்­க­ள் மத்­தி­யில் பிர­ப­ல­மான கேலிச்­சித்­தி­ரங்­களைத் தமிழ் தொடர்­

க­ளு­டன் இணைத்து படைக்­கும்­போது அவற்றை அந்த இளை­யர்­கள் தங்­க­ளு­டன் தொடர்­பு­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான ஒரு வாய்ப்­பாக அது அமை­கிறது. மேலும், தன் படைப்­பு­கள் இளை­யர்­க­ளைத் தமி­ழில் வாசிக்­க­வும் பேச­வும் தூண்­டும் என ராம் நம்­பு­கி­றார்.

"தமி­ழில் ஆர்­வ­மு­டைய இளை­யர்­க­ளு­டன் இணைந்து 2019ஆம் ஆண்­டில் 'அத்தி­யா­யம்' என்ற நாட­கத் தயா­ரிப்­பிற்­காக தமி­ழில் முதல்­மு­றை­யாக எழு­தி­னேன். அந்த அனு­ப­வத்­தின் மூலம் நான் நிறைய அடிப்­ப­டைத் திறன்­க­ளைக் கற்­றுக்­கொண்­டேன். நான் கேலிச்­சித்­தி­ரங்­க­ளுக்­காக எழு­து­வ­தற்கு அந்த அனு­ப­வமே

கைகொ­டுத்­தது," எனத் தனது பய­ணத்­தைப் பற்றி பகிர்ந்­து­கொண்­டார் ராம்.

"எனக்கு வரை­க­லை­யில் மிகுந்த ஆர்­வம் இருந்­த­போ­தும் என் வய­து­டைய மற்ற மாண­வர்­க­ளின் திறன்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் எனது திறன் போதாது என எனக்­குத் தோன்­றி­யது. என் திறன்­களை மேம்­

ப­டுத்­தும் முயற்­சி­யில் நான் தின­மும் வரை­யத் தொடங்­கி­னேன். காலப்­போக்­கில், நான் நிறை­யக் கற்­றுக்­கொண்­டேன். என் படைப்­பு­க­ளின் தர­மும் மேம்­பட்­டது," என்று அவர் குறிப்­பிட்­டார்.

தன் கலைப்பயணத்திற்குத் தன்னுடைய நண்பர்களே பெரும் தூண்டுகோலாக இருந்ததாக ராம் கூறுகிறார்.

"என் நண்­பர்­கள் என் திறனை மனத்தில் கொண்டு எனக்கு ஒரு ஸ்கே­ன­ரைப் பரி­ச­ளித்­த­னர். அதைப் பயன்­ப­டுத்தி நான் காகி­தத்­தில் வரைந்­த­வற்றை மின்­னி­லக்க நக­லெ­டுத்து படங்­க­ளுக்கு வண்­ணங்­கள் சேர்க்கிறேன்," என்று ராம் கூறி­னார்.

புதிய நம்­பிக்­கையுடன் தனக்­கென ஓர் இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தைத் தொடங்கி படிப்­ப­டி­யாக மின்­னி­லக்­கத் திற­னு­டன் வரை­யக் கற்­றுக்­கொண்­டார். ஓர் ஐபேட், ஆப்­பிள் பேனா ஆகி­ய­வற்­றில் முத­லீடு செய்து, இன்று நேர­டி­யா­கவே அதில் தனது படைப்­பு­களை வரைந்து பதிவு செய்­கி­றார்.

வரை­க­லைத் துறை­யில் ஆர்­வ­முள்ள இளை­யர்­கள், தங்­க­ளின் திறனை மேம்

­ப­டுத்­தும் முயற்­சி­யில் இறங்க வேண்­டும். வரை­க­லைத் துறையை வளர்க்க பாடு­பட வேண்­டும் என ராம் கரு­து­கி­றார்.

இனி வரும் ஆண்­டு­களில், இரு

­மொ­ழிக் கல்­வியை ஆத­ரிக்­கும் வகை­யில் சுவா­ர­சி­ய­மான கேலி­ச்சித்­தி­ரக் கதை­களை ஆங்­கி­லம், தமிழ் என இரு­மொ­ழி­க­ளி­லும் இளை­யர்­களை ஈர்க்­கும் வண்­ணம் எழுதி வெளி­யிட வேண்­டும் என்­னும் இலக்­கை­யும் ராம் கொண்­டுள்­ளார். @raamster_art இணைப்பின்வழி இவர் படைப்புகளைக் காணலாம்.

gayathri@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!