உயிரல்லதெல்லாம் உயிர்கொள்ளும் அழகு

நம்மை விட்­டுப் பிரிந்­த­வர்­கள் நமது பிறந்­த­நாள் கொண்­டாட்­டம், பட்­ட­ம­ளிப்பு விழா, திரு­மண நாள் போன்­ற­வற்­றில் இல்­லா­த­து­ய­ரத்தை உணர்ந்து தன் கற்­ப­னைத் திறத்­தால் மின்­னி­லக்க வரை­க­லை­வழி அவர்­களை நம் கண்­முன்னே கொண்­டு

­வ­ரு­வ­தில் 24 வயது பிரீத்­திக்கா

செல்­வகு­மார் கைதேர்ந்­த­வ­ராக விளங்­கு­கி­றார். முக்­கிய நிகழ்­வு­க­ளின்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களில் மறைந்­த­வர்­க­ளைச் சேர்த்து வரைந்து வரு­கி­றார் பிரீத்­திக்கா. சிறு­வ­ய­தி­லி­ருந்தே ஓவி­யக்­கலை மீது அவருக்கு ஆர்வம். கடந்த ஆண்டு தந்­தை­யின் பிறந்­த­நா­ளுக்­குத் தன் சகோ­தரி பரி­ச­ளித்த 'ஐபேட்' மூலம் பிரீத்­திக்­கா­வின் கலைப் பய­ணம் சுவா­ர­சி­ய­மா­னது.

தந்­தை­யி­ட­மி­ருந்து சாத­னத்தை இர­வல் பெற்­றுக்­கொண்டு என்­னென்ன செய­லி­கள் அதில் உள்­ளன என ஆராய்ந்­தார் பிரீத்­திக்கா. பின்­னர், 'ப்ரோ­கி­ரி­யேட்' மின்­னி­லக்க வரை­க­லைச் செயலி அவ­ரின் ஆற்­றலை வெளிப்­ப­டுத்த உத­வி­யது.

சட்­டத்­து­றை­யில் இறு­தி­யாண்டு மாண­வி­யா­கப் பயி­லும் இவ­ருக்கு, இந்­தத் திறன் பின்­னா­ளில் ஒரு பகு­தி­நேர வர்த்­த­க­மா­கவே மாறி­யது. உள்­ளூர் கலை­ஞர்­க­ளை­யும் வரைந்து, சமூக ஊட­கங்­கள்­வழி அவற்றை விளம்­ப­ரம் செய்து பல­ரது கவ­னத்தை ஈர்த்­தும் உள்­ளார் இவர்.

தற்­போது 'நெட்ஸ் ஃபிளாஷ்பே' அட்­டை­யில் நடி­கர்­க­ளின் ஓவி­யங்­க­ளைப் பதித்து வரு­கி­றார். இந்த முயற்­சி­யில் தன் குடும்­பத்­தா­ரின் ஆத­ரவு பெரி­தும் கைகொ­டுத்­த­தா­கக் கூறுகிறார் பிரீத்­திக்கா.

"இது வெறும் வர்த்­த­கம் மட்­டு­மல்ல. என் படைப்­பு­க­ளால் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஏற்­படும் மன­நி­றைவே, இந்த முயற்­சி­யைத் தொட­ரப் பெரும் ஊக்­கு­விப்­பாக அமை­கிறது. எனது வரை­க­லைத் திறன் ஒரு­வர் வாழ்க்­கை­யில் சிறி­ய­தொரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­கிறது என்று நினைக்­கும்­போது அது எனக்கு மகிழ்ச்சி அளிக்­கிறது," என்று கூறு­கி­றார் பிரீத்­திக்கா.

இவர் படைப்­பு­களை இன்ஸ்­ட­கி­ரா­மில் '@eeia.pq' இணைப்­பு­வழி காண­லாம்.

பண்­டி­கைக்­கால வாழ்த்து அட்­டை­கள், பணப் பைகள், புகைப்­ப­டங்­கள் என்று வடி­வ­மைத்­துக்­கொண்­டி­ருந்த இவர், வரும் டிசம்­பர் மாதம் திரு­ம­ண­மா­க­வுள்ள தன் தோழி நமீரா கேட்­டுக்­கொண்­ட­தால் அவ­ரின் திரு­மண அழைப்­பி­த­ழை­யும் மின்­னி­லக்க முறை­யில் வடி­வ­மைக்­கி­றா­ராம்.

இது குறித்து பேசிய நமீரா, "பிரீத்­திக்கா ஒவ்­வொரு படத்­தி­லும் தன் உழைப்­பை­யும் நேரத்­தை­யும் செல­விட்டு மிக நுணுக்­க­மாக வரை­வதை நான் பார்த்­தி­ருக்­கி­றேன். என் திரு­மண அழைப்­பி­தழை வடி­வ­மைக்க இவ­ரை­விட யாரா­லும் சிறப்­பா­கச் செய்ய முடி­யாது. நான் நினைத்­தது போலவே, சிறந்த முறை­யில் என் அழைப்­பி­தழை வடி­வ­மைத்­துள்­ளார்," என்­றார்.

இந்­தி­யர்­கள் மட்­டு­மன்றி வேற்று இனத்­த­வ­ரை­யும் தம் படைப்­பு­க­ளால் ஈர்க்க வேண்­டும் என்­பதே பிரீத்­திக்­கா­வின் கன­வா­கும்.

uponmani@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!