‘கொவிட்-19 மரணங்களைக் குறைக்க தடுப்பூசி உதவியது’

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தால், பாத­க­மான எதிர்­வி­ளை­வு­க­ளால் பாதிக்­கப்­பட்ட 2,000க்கும் மேற்­பட்­டோர், கொவிட்-19 தொடர்­பான வேறு­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து (விடி­எஸ்) விலக்கு பெற்­றுள்­ள­னர் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

கொவிட்-19 தொடர்­பி­ல் மர­ண­ம­டைந்­த­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்வதற்கான தகு­தி­யில்­லா­த­வர்­கள் என்று வகைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களா என்று உறுப்­பி­னர்­கள் சிலர் கேட்ட கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில் பேசிய திரு ஓங், இந்த எண்­ணிக்­கையை சுகா­தார அமைச்சு கண்­கா­ணிப்­ப­தில்லை என்­றார்.

இவ்­வாண்டு ஜூன் 30ஆம் தேதி வரை, கொவிட்-19 தொடர்­பான வேறு­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து விலக்கு வேண்­டும் என்று விண்­ணப்­பித்­த­வர்­களில் 2,100 பேர் அதில் வெற்றி பெற்­ற­னர் என்று தெரி­வித்த அமைச்­சர், இந்­தப் பிரி­வில் உள்­ள­வர்­க­ளின் மரண விதி­கம் 1,000 பேரில் இரண்டு என்­றும் மக்­கள்தொகை­யில் பார்த்­தால் 1,000 பேருக்கு 0.3 புள்ளி என்­றும் விவ­ரித்­தார்.

"உண்­மை­யில், பல வகை தடுப்­பூ­சித் தெரி­வு­கள் இருப்­ப­தைக் கருத்­தில்கொண்டு பார்த்­தால், கொவிட்-19 தடுப்­பூ­சிக்­குத் தகுதி பெறா­த­வர்­கள் எண்­ணிக்கை குறை­வு­தான்," என்­றார் திரு ஓங்.

ஜன­வரி 2020 முதல் ஜூன் 2022 வரை பெருந்­தொற்­றுக் காலத்­தில் கிட்­டத்­தட்ட 2,490 கூடு­தல் மர­ணங்­கள் நிகழ்ந்­த­தாக சுகா­தார அமைச்சு கடந்த மாதம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரியவந்­தது.

இந்த அறிக்கை, பெருந்­தொற்று தொடங்­கி­ய­தி­லி­ருந்து நிகழ்ந்த மர­ணங்­க­ளுக்­கும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று இல்­லா­தி­ருந்­தால் நிகழ்ந்­தி­ருக்­கக்­கூ­டிய மர­ணங்­க­ளுக்கு இடை­யி­லான வேறு­பாட்டை எடுத்­து­ரைத்­தது.

சிங்­கப்­பூ­ரில் ஐந்து மர­ணங்­களில் மூன்று கொரோனா கிரு­மித்­தொற்­றால் நேர­டி­யா­கப் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் என்­ப­தை­யும் எண்­ணிக்­கை­யில் எஞ்­சி­யுள்ள நோயா­ளி­கள் கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு 90 நாள்­க­ளுக்­கும் இதர மருத்­துவ பிரச்­சி­னை­க­ளால் மாண்­ட­வர்­கள் என்­ப­தை­யும் சுட்­டிக் காட்­டி­யது.

"சில ஆண்­டு­கள் முன்­னெற்­றத்­துக்­குப் பிறகு, நமது மரண விகி­தம் 2018ஆம் ஆண்டு நிலைக்­குச் சென்­று­விட்­டது. தங்­க­ளின் மரண எண்­ணிக்­கையை வெளி­யிட்ட மற்ற நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், சிங்­கப்­பூ­ரின் கூடு­தல் மரண விகி­தம் மிகக் குறைவு. இது உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் 2020, 2021ஆம் ஆண்­டு­க­ளின் மதிப்­பீ­டு­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது," என்­றும் அமைச்­சர் விளக்­கி­னார்.

பூஸ்­டர் எனும் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தன் முக்­கி­யத்­து­வத்தை மீண்­டும் வலி­யு­றுத்­திய திரு ஓங், தடுப்­பூ­சி­க­ளால் மட்­டுமே கிரு­மித்­தொற்­றைத் தடுக்க முடி­யும் என்­றார்.

"நாம் பூஸ்­டர் தடுப்­பூசி போட்டுக்­ கொள்ள வேண்­டும். அதா­வது மூன்று எம்­ஆர்­என்ஏ தடுப்­பூ­சி­கள். அது கடு­மை­யான நோய்­கள் மற்றும் மர­ணங்­க­ளுக்கு எதி­ராக நம்­மைப் பாது­காக்­கும். இரண்டு தடுப்­பூ­சி­கள் மட்­டும் போதாது.

"கிரு­மித்­தொற்று மற்­றும் கடு­மை­யாக நோயு­று­தல் விகி­தம் திடீ­ரென அதி­க­ரித்­தால், மீண்­டும் பாது காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தைத் தவிர்க்க முடி­யாது. ஆனால் உயிர்­க­ளைக் காப்­பாற்­று­வ­தற்­காக எடுக்­கப்­படும் அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­யாக அது அமை­யும்," என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

"பெருந்­தொற்று இன்­னும் முடி­வுக்கு வர­வில்லை. ஆனால், இறு­திக் கட்­டத்தை நெருங்­கி­யுள்­ளோம் என்ற நம்­பிக்­கை­யில் இருக்­கி­றோம். மக்­க­ளின் தாக்­கு­பி­டிக்­கும் தன்­மை­யு­ட­னும் ஒற்­று­மை­யு­ட­னும் அதை எதிர்­கொள்ள ஆயத்த நிலை­யில் உள்­ளோம்," என்­றார் திரு ஓங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!