சமூக ஊடகங்களுக்கு கடிவாளம்

சமூக ஊட­கங்­களில் வெளி­யா­கும் தீங்கு விளை­விக்­கும் உள்­ள­டக்­கத்­தி­லி­ருந்து இங்­குள்­ளோ­ரைப் பாது­காப்­ப­தற்­காக புதிய கட்­டுப்­பா­டு­கள் கொண்டு வரப்­ப­டு­கின்­றன.

பய­னா­ளர்­க­ளுக்­கான உள்­ள­டக்­கங்­களில் சமூக ஊட­கத் தளங்­க­ளை­யும் பொறுப்பு ஏற்­கச் செய்­வது கட்­டுப்­பா­டு­களில் ஒன்று.

சமூக ஊட­கங்­க­ளுக்கு கடி­வா­ளம் போடும் மசோதா நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டது. இணை­யப் பாது­காப்பு (பல­வகை திருத்­தம்) சட்­டத்­தின் கீழ் இந்த மசோதா கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

இதன் கீழ் பிறப்­பிக்­கப்­படும் உத்­த­ரவை மீறும் சமூக ஊட­கங்­க­ளுக்கு ஒரு மில்­லி­யன் வெள்ளி வரை அப­ரா­தம் அல்­லது சிங்­கப்பூ­ரில் அதன் சேவை­க­ளுக்­குத் தடை விதிக்க வாய்ப்­புள்­ளது.

முக்­கிய சமூக ஊட­கங்­களில் உள்­ளூர்க்­கா­ரர்­க­ளைப் பாதிக்­கும் உள்­ள­டக்­கம் இடம்­பெற்­றி­ருந்­தால் அதனை அகற்ற தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் உத்­த­ர­விட புதிய மசோதா அதி­கா­ர­ம­ளிக்­கும்.

தற்­கொ­லைக்­குத் தூண்­டு­தல், குழந்தை பாலி­யல் செயல்­கள், பயங்­க­ர­வா­தம், இன மற்­றும் சமய பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தும் உள்­ள­டக்­கம், பொதுச் சுகா­தா­ரத்­துக்கு ஆபத்தை விளை­வித்­தல் உள்­ளிட்­டவை தீங்­கி­ழைக்­கும் உள்­ள­டக்­கங்­க­ளா­கக் கரு­தப்­ப­டு­கின்­றன.

ஒளி­ப­ரப்­புச் சட்­டத்­தின் கூடு­தல் அம்­ச­மான இந்த மசோதா, இணை­யத் தொடர்பு சேவை­களை ஓழுங்­கு­ப் படுத்துகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்­ட­கி­ராம், டிக்­டாக் போன்ற பெரிய சமூக ஊட­கங்­களும் புதிய கட்­டுப்­பா­டு­க­ளுக்கு உட்­பட வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!