செய்திக்கொத்து

போலி மின்னஞ்சல்கள்: பிரதமர் அனுப்பியதுபோல அனுப்பப்பட்டன

பிரதமர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் எனப் பார்ப்பவரை நம்பவைக்க போலி மின்னஞ்சல்களை மோசடிக்காரர்கள் அனுப்பியிருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் நேற்று தெரிவித்தார்.

அரசாங்கத் தலைவர்கள், பிரபலங்கள் ஆகியோரை அந்த மின்னஞ்சல்கள் குறிவைக்கின்றன.

இத்தகைய மின்னஞ்சலைப் பெற்றால் அவற்றைப் புறக்கணிக்கும்படி, குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டாம் என்றும் பிரதமர் லீ கேட்டுக்கொண்டார்.

"மோசடிக்காரர்கள் விடாமல் மோசடி வலை விரிக்கின்றனர், அனைவரும் விழிப்புடனும் கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும். சந்தேகம் எழுந்தால் எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு முன்பு சரிபார்த்துக்கொள்ளுங்கள்," என்றார் திரு லீ.

போதைப்பொருள் கடத்தியவருக்கு மரண தண்டனை

போதைமிகு அபினைச் சிங்கப்பூருக்குள் கடத்திய குற்றத்துக்காக 49 வயது ஆடவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று சிங்கப்பூரரான முகம்மது அன்சாரி முகம்மது அப்துல் அசிசையும் அவரது இந்தோனீசியக் காதலியான 26 வயது பெல்லா ஃபடில்லாவையும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

அந்தத் தம்பதியர் வசித்த வாடகை வீட்டில் போதைப்பொருள் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

போதைப்பொருள் பொட்டலங்களுக்கும் தமது காதலிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அன்சாரி முதலில் வாக்குமூலம் அளித்தார்.

ஆனால் போதைப்பொருளைப் பொட்டலம் கட்ட அவர் உதவியதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளில் பெரும்பாலானவை தமது காதலியுடையது என்று வழக்கு விசாரணையின்போது அன்சாரி கூறினார்.

13.72 கிராம் போதைப்பொருள் மட்டுமே தம்முடையது என்றார் அவர். மரண தண்டனை நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச அளவைவிட அவர் குறிப்பிட்ட அளவு குறைவு.

ஆனால் அன்சாரி கூறியதை நீதிபதி வெலரி தியேன் ஏற்க மறுத்தார்.

ஏமாற்றிப் பணம் பறித்த ஆடவருக்குச் சிறைத் தண்டனை

விலை உயர்ந்த கைப்பைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி $17,000க்கும் அதிகமான தொகையை ஏமாற்றிப் பறித்த ஆடவருக்கு 16 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

33 வயது சூன் யோங் ஜியேவிடம் குறைந்தது ஆறு பேர் ஏமாந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தக் குற்றங்களை சூன் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தம்மீது விதிக்கப்பட்ட மூன்று மோசடிக் குற்றச்சாட்டுகளை சூன் ஒப்புக்கொண்டார். தீர்ப்பளிக்கும்போது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!