மண்டாய் வனப்பகுதியில் புதிய அம்சங்களுடன் பறவைப் பூங்கா

ஜூரோங் பற­வைப் பூங்கா அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் மூடப்­ப­ட­வுள்ள நிலை­யில், 2023ஆம் ஆண்­டின் இரண்­டாம் காலாண்­டில் மண்­டா­யில் 'பெர்ட் பார­டைஸ்' எனப்­படும் புதிய பற­வை­கள் பூங்கா திறக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்­தப் புதிய பற­வைப் பூங்­கா­வில் எட்டு நடை­பாதை உடைய பறவை காப்­ப­கப் பகு­தி­கள் இருக்­கும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

தற்­போ­தைய பற­வைப் பூங்­கா­வில் நான்கு காப்பகப் பகுதிகள் மட்டுமே உள்­ளன. இங்கு உல­கின் பல இயற்கை சூழ­லில் உள்ள பறவை இனங்­கள் இருக்­கும். அத்­து­டன் இங்கு பாது­காக்­கப்­படும் பற­வை­கள் தங்­க­ளது இயல்பான பழக்க வழக்­கங்­கங்­க­ளைக் கொண்­டி­ருக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

ஜூரோங்­கில் 20 ஹெக்­டர் பரப்­ப­ள­வில் இருந்த பற­வைப் பூங்­கா­வை­விட புதிய பூங்கா சிறி­ய­தாக, 17 ஹெக்­டர் பரப்­ப­ளவைக் கொண்­டி­ருக்­கும் என்­றா­லும் இங்கு பற­வை­க­ளின் தங்­கு­மி­டம் ஜூரோங்­கில் இருந்­த­தை­விட பெரி­தாக இருக்­கும் என பற­வைப் பர­மா­ரிப்­பா­ளர்­கள் தெரிவித்துள்ளனர்.

அத்­து­டன், ஜூரோங் பற­வைப் பூங்­கா­வில் இருந்­த­தைப் போலவே புதிய பூங்­கா­வி­லும் 400 இனங் களைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 3,500 பற­வை­கள் இருக்­கும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

இதில் 24 விழுக்­காடு பற­வை­கள் அரிய இனத்­தைச் சேர்ந்­தவை என்­றும் கூறப்­ப­டு­கிறது.

அதில் குறிப்­பாக, 'ஹார்ன்­பில்' எனப்­படும் 20 வகை இரு­வாய்க்­கு­ருவி இனப் பற­வை­கள் பார்ப்­போர் கண்­க­ளுக்கு விருந்­தாய் அமை­யும்.

ஜூரோங் பற­வைப் பூங்­கா­வின் சிறப்பைப் பறைசாற்­றும் வித­மாக புதிய பூங்­கா­வில் கீழே குறிப்­பி­டப்­படும் அம்­சங்­க­ளைக் கொண்­டி­ருக்­கும்.

ஹார்ட் ஆஃப் ஆப்­பி­ரிக்கா- இதுவே புதிய பூங்­கா­வின் ஆகப் பெரிய நடைபாதைப் பூங்கா பகுதி. இது ஆப்­பி­ரிக்க கண்­டத்­தி­லுள்ள மழைக்­காட்­டுப் பகு­தி­யில் உள்ள பற­வை­கள் சர­ணா­ல­யத்தை ஒத்­தி­ருக்­கும்.

இங்கு வரும் பார்­வை­யா­ளர்­கள் வண்­டு­கள் போன்ற பூச்­சி­களை பற­வை­கள் பறந்து வந்து கொத்­தித் தின்­னும் காட்­சி­க­ளைக் காண­லாம்.

அடுத்து, விங்ஸ் ஆஃப் ஏஷியா என்ற பற­வை­கள் பகு­தி­யை­யும் இங்கு காண­லாம்.

இந்­தப் பகுதி தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் உள்ள வயல் பகு­தி­கள் மற்­றும் மூங்­கில் காட்­டுப் பகுதியை நம் கண்­முன் கொண்டு வந்து நிறுத்­தும்.

இங்கு 'ஃபெசண்ட்' எனப்­படும் ஒரு வகை நீண்ட வால் கொண்ட வண்­ணப் பறவை இனம் உண­வுக்­காக பூமி­யைக் கிள­று­வ­தை­யும் 'ஹார்ன்­பின்' பற­வை­கள் மரங்­க­ளுக்கு மேலே பறப்­ப­தை­யும் கண்டு களிக்­க­லாம்.

இங்­கி­ருக்­கும் கிரிம்­சன் வெட்­லேண்ட்ஸ் மற்­றோர் பற­வைப் பகு­தி­யா­கும்.

இந்­தப் பகு­தி­யில் பல­வித வண்­ணப் பற­வை­கள் இருப்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, பார்­வை­யா­ளர்­கள் மக்­காவ் எனப்­படும் ஐந்து வண்­ணக்­கி­ளி­கள் உணவு உண்­ப­தைப் பார்த்து பர­வ­ச­ம­டை­ய­லாம்.

அமே­சோ­னி­யன் ஜுவல்ஸ் என்ற பகு­தி­யும் இங்­கி­ருக்­கும். இதில் தென் அமெ­ரிக்­கா­வில் உள்ள அமே­சோன் மழைக்­காட்­டுப் பகு­தி­களில் பறந்தி திரி­யும் பறவை இனங்­களைப் பார்­வை­யா­ளர்­கள் பார்த்து ரசிக்­க­லாம்.

புதிய பூங்கா பற்­றிக் கூறும் மண்­டாய் வைல்ட்­லைஃப் அமைப்­பின் தலைமை நிர்­வாகி மைக் பார்க்­கிலே, புதிய பூங்கா விலங்கு நலத்தை மைய­மா­கக் கொண்டு செயல்­படும் எங்­கள் கடப்­பாட்டை பிர­தி­ப­லிக்­கும் என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!