செய்திக்கொத்து

ஓய்வுபெறும் வயதுக்குப் பிறகான வேலை: ஆண்டுக்கு 80 சர்ச்சைகள்

ஓய்வுபெறும் வயதுக்குப் பிறகு மீண்டும் வேலை கேட்ட ஊழியர்களுக்கும் அவர்களின் முதலாளிகளுக்கும் இடையே 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் 80 சர்ச்சைகளை மனிதவள அமைச்சு கையாண்டிருக்கிறது. மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் நேற்று நாடாளுமன்றத்தில் அத்தகவலைத் தெரிவித்தார்.

நியாயமில்லாமல் மறுவேலை நியமனம் மறுக்கப்பட்டது என்ற புகார், மறுவேலை நியமனத்துக்கான வரையறைகளில் கருத்துவேறுபாடு போன்ற சர்ச்சைகளும் கையாளப்பட்டன.

மறுவேலை நியமனம் தொடர்பாக 2016 முதல் 2021 வரையிலான சர்ச்சைகள் பற்றி பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த மன்ற உறுப்பினர்கள் ஜெரால்ட் கியாம், சில்வியா லிம் இருவரும் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் தந்தார்.

சர்ச்சைகளில் 90 விழுக்காடு பஞ்சாயத்து வழி தீர்க்கப்பட்டன. ஊழியர் மேல்முறையீட்டை மீட்டுக்கொண்ட சம்பவங்களும் அவற்றில் அடங்கும் என்றார் டாக்டர் கோ.

உள்துறை அமைச்சு அதிகாரிகளிடையே உயிர்மாய்ப்பு

கடந்த 2018 ஜனவரி முதல் 2022 செப்டம்பர் வரையில் சீருடை அணிந்த உள்துறைக் குழு அதிகாரிகளிடையே எட்டு உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் மூன்று உயிர்மாய்ப்புச் சம்பவங்களின் மரண விசாரணை நிலுவையில் உள்ளன. உள்துறை அமைச்சு ஊழியர்களிடையிலான உயிர்மாய்ப்புச் சம்பவங்களின் விகிதம், தேசிய சராசரியில் பாதி என்று உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் நாடாளுமன்றத்தில் கூறினார்.

அதிகாரிகளின் மனநலனுக்கு ஆதரவளிக்கும் உள்துறைக் குழு நடவடிக்கைகள் குறித்து நேற்று பேசிய அமைச்சர், உள் உளவியல் சேவைகள், வெளி ஆலோசனை சேவைகள், சக ஊழியர் ஆதரவுத் திட்டங்கள், புதிய அதிகாரிகளுக்கான மீள் திறன், மன உளைச்சலைக் கையாள்தல் தொடர்பான பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.

சிங்கப்பூர் காவல்துறை உளவியலாளர்கள், அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்குமான வழக்கமான மனநல விழிப்புணர்வு நடவடிக்கைகளின்போது, உதவியை நாடுவதற்கான மனத்தடைகளைக் களைய முயல்வதையும் அவர் சுட்டினார்.

'பிடிஓ' வீட்டைப் பதிவு செய்த இளம் தம்பதிகளின் விகிதம் குறைந்தது

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் (பிடிஓ) வீடுகளை, வெற்றிகரமாக முன்பதிவுசெய்து வீட்டை பெற்ற இளம் தம்பதிகளின் விகிதம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வந்துள்ளது.

தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று முன்தினம் சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னேன் அப்துல் ரஹிமின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக பதில் அளித்தது.

பிடிஓ வீடுகளுக்கான வழக்கமான விண்ணப்பம் ஆண்டுக்கு நான்கு முறையும் மீதமிருக்கும் வீடுகளுக்கான விண்ணப்பம் ஆண்டுக்கு இரண்டு முறையும் நடைபெறும்.

இருவரில் ஒருவர் 30 வயதுக்குக் குறைவானவராக உள்ள இளம் தம்பதிகள், மீதமிருக்கும் வீடுகளின் விற்பனையின் மூலம் வெற்றிகரமாக வீட்டை முன்பதிவு செய்து பெற்ற விகிதம் குறைந்தது. 2017ஆம் ஆண்டு 52 விழுக்காடாக இருந்த அந்த விகிதம், 2021ஆம் ஆண்டு 21 விழுக்காடானது. வழக்கமான விற்பனையில் விண்ணப்பித்து பிடிஓ வீட்டை முன்பதிவு செய்த இளம் தம்பதிகளின் விகிதமும் குறைந்தது. அதனுடன், பிள்ளைப்பேறு இடைக்கால குடியிருப்புத் திட்டத்தின்கீழ் வீட்டை முன்பதிவு செய்து பெற்ற இளம் தம்பதிகளின் விகிதம் குறைந்ததாக தேசிய வளர்ச்சி அமைச்சு கூறியது.

மழைக்காலங்களில் சரிவான பகுதிகளில் கூடுதல் சோதனைகள்

கடும் மழை பெய்யும் காலங்களில் அரசாங்க அமைப்புகள் சரிவான பகுதிகளில் கூடுதல் சோதனைகளை அடிக்கடி செய்யும் வாய்ப்புள்ளது. வாரத்துக்குச் சில முறையோ மாதத்துக்குச் சில முறையோ சோதனைகள் நடத்தப்படலாம்.

கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி பெய்த கனமழையில் கிளமெண்டியில் உள்ள ஒரு பிடிஓ வீட்டுத் திட்டத்தில் மண் திடீரென்று வலுவிழந்து நிலச்சரிவு ஏற்பட்டது.

அச்சம்பவத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் அளித்த எழுத்துபூர்வ பதிலில் கூறினார். அதே நேரத்தில் தொடர் கடும்மழை, கட்டுமானப் பணியால் சாய்வுப் பகுதியில் கூடுதல் பாரம் ஏற்றுவது, அதில் செய்யப்படும் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் மண்சரிவு ஏற்படலாம் என்றார் திரு லீ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!