வீவக வீட்டு விலை கட்டுக்குள் இருக்க ஆவன செய்யப்படும்

அர­சாங்க வீடு­க­ளின் விலையை சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குக் கட்­டுப்படி­யா­க­வும் சொத்­துச் சந்­தையை நிலை­யா­க­ வைத்­தி­ருக்கவும் அண்­மைய சொத்­துச் சந்­தைத் தணிப்பு நட­வ­டிக்­கை­க­ளைப் போலவே அர­சாங்­கம் தலை­யிட்டு தேவை­யா­ன­வற்­றைச் செய்­யும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட லீ தெரி­வித்­துள்­ளார்.

உள்­ளூ­ரில் வீட்டு விலை­யைப் பாதித்து, சொத்­துச் சந்­தை­யில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தும் நிலை­யற்ற உல­கப் பொரு­ளி­யல் சூழ­லை­யும் வட்டி விகி­தம் உயர்­வை­யும் கருத்­தில் கொண்டு அர­சாங்­கம் உறு­தி­யா­க­வும் கவ­னத்­து­ட­னும் தலை­யி­டும் என்­றார் திரு லீ.

திரு லீ, நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று இயோ சூ காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்­பி­னர் யிப் ஹோன் வெங்­கின் கேள்­வி­க­ளுக்­குப் பதில் அளித்­தார்.

"பொரு­ளி­யல் அடிப்­ப­டைக் கோட்­பா­டு­க­ளுக்கு ஏற்ப விலை­களும் இருப்­பதை உறுதி செய்ய, சொத்­துச் சந்­தையை தொடர்ந்து அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வீட­மைப்­புத் தேவை, விநி­யோ­கம் ஆகி­யவை தொடர்­பான கொள்­கை­க­ளைத் தேவைக்கு ஏற்ப மாற்று­ வோம்," என்று அவர் கூறினார்.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­க­ளின் விலை குடும்­பங்­க­ளின் இடை­நிலை வரு­வாய் அல்­லது பிற வரு­வாய், சொத்துக் குறியீடுகளுக்கு ஏற்ப நிர்­ண­யிக்­கப்­ப­ட­லாமா என்று திரு யிப் கேட்­டி­ருந்­தார். சிங்­கப்­பூ­ரில் சொத்து பொது­மக்­க­ளுக்­குக் கட்­டுப்­ப­டி­யாக இல்லை என்ற கருத்­தைக் களைய எடுக்­கப்­பட்டு வரும் நட­வ­டிக்­கை­கள் பற்­றி­யும் அவர் கேள்வி எழுப்­பி­னார்.

வீவக வீடு­க­ளின் விலை நிலை­யாக இருப்­பதை உதா­ர­ணம் வழி அமைச்­சர் லீ சுட்­டிக்­காட்­டி­னார்.

முதிர்ச்சி அடை­யாத வீட­மைப்­புப் பேட்­டை­யில் உள்ள ஒரு புதிய நான்­கறை வீட்­டின் விலை 2019ல் $341,000 ஆக இருந்­தது. ஒப்­பு­நோக்க, இவ்­வாண்­டின் முதல் மூன்று காலாண்­டு­களில் அவ்­விலை $348,000 ஆக இருந்­தது.

புதிய வீடு­க­ளைக் கட்­டுப்­ப­டி­யாக வைத்­தி­ருக்க கட்­ட­ணக் கழி­வு­கள் உயர்த்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் திரு லீ குறிப்­பிட்­டார்.

தகு­தி­பெற்ற முதல் முறை­யாக வீடு வாங்­கு­வோர், $80,000 வரை­யி­லான மேம்­பட்ட மத்­திய சேம நிதி வீட்டு மானி­யங்­க­ளைப் பெற­லாம். குறைந்த ஊதி­யம் உள்­ள­வர்­க­ளுக்கு அதை­விட கூடு­தல் உதவி கிடைக்­கும் என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரில் உள்­ள­தை­விட மற்ற பெரு­ந­க­ரங்­களில், இடை­நிலை வீட்டு­ வி­லைக்­கும் இடை­நிலை குடும்ப வரு­வாய்க்­கும் இடை­யி­லான விகி­தம், பல மடங்கு அதி­க­மாக இருப்­பதை அமைச்­சர் சுட்­டி­னார். லாஸ் ஏஞ்­ச­லிஸ், லண்­டன், சிட்னி போன்ற நக­ரங்­களில் அந்த விகி­தம் சிங்­கப்­பூரை விட 8 முதல் 15 மடங்கு அதி­கம். ஹாங்­காங்­கில் அது 20 மடங்கு அதி­கம்.

மேலும், முதல்­முறை வீடு வாங்­கும், தகு­தி­பெற்ற குடும்­பங்­க­ளுக்கு மறு­விற்­பனை வீடு­களை கட்­டுப் ­ப­டி­யாக வைத்திருக்க, $160,000 வீட்டு மானி­யங்­கள் வழங்­கப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!