190,000 முதியவர்களுக்கு மின்னிலக்கத் திறன்பயிற்சி

தக­வல்­தொ­டர்பு, ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தின் மூத்­தோர் மின்­னி­லக்­க­ம­ய­மா­கும் திட்­டத்­தின்­கீழ், அர­சாங்க சேவை­களை 190,000க்கும் அதி­க­மான முதி­ய­வர்­கள் அடிப்­படை மின்­னி­லக்­கத் திறன்­களில் பயிற்சி பெற்­றுள்­ள­னர். கைப்­பே­சி­யைப் பயன்­ப­டுத்தி அர­சாங்கச் சேவைகளை அணு­கு­வது அவற்றில் ஒன்று.

ஒப்­பு­நோக்க சென்ற ஆகஸ்ட் மாதம் வரை 150,000 முதி­ய­வர்­ க­ளுக்­குத் திட்­டத்­தின் மூலம் மின்­னி­லக்­கத் திறன் பயிற்சி வழங்­கப்­பட்­டி­ருந்­தது. தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் இப்­புள்­ளி­வி­வ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் லியாங் எங் ஹுவா (புக்­கிட் பாஞ்­சாங்), டெஸ்­மண்ட் சூ (தெம்­ப­னிஸ் குழுத்­தொ­குதி) இரு­வ­ரின் கேள்­வி­க­ளுக்கு அமைச்­சர் பதில் அளித்தார்.

இணைய மோச­டி­க­ளைத் தவிர்க்க முதி­ய­வர்­க­ளுக்கு உதவ திட்­ட­முள்­ளதா என்று இரு­வ­ரும் கேட்­டி­ருந்­த­னர்.

முதி­ய­வர்­கள் மின்­னி­லக்க மயா­கும் திட்­டம் 2020ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­டது. அத்­திட்­டத்­தின்­கீழ், மின்­னி­லக்­கத் தூதர்­கள் முதி­ய­வர்­க­ளுக்­குப் ப­யிற்சி அளிப்­பர். கைப்­பே­சி­யைப் பயன்­ப­டுத்தி மின்­னி­யல் முறை­யில் கட்­ட­ணம் செலுத்­து­தல், வீடியோ அழைப்­பு­க­ளைச் செய்­தல் போன்­றவை கற்­றுத் தரப்­ப­டு­கின்­றன.

பயிற்சி பெற்ற முதி­ய­வர்­களில் 10ல் ஒன்­பது பேர் தாங்­கள் கற்ற மின்­னி­லக்­கத் திறன்­களை அன்­றாட வாழ்­வில் பயன்­ப­டுத்­தப் போவ­தா­கக் கடந்த ஆண்டு நடத்­தப்­பட்ட கணக்காய்வில் கூறி­னர் என்­று திரு­மதி டியோ குறிப்பிட்டார்.

மின்­னி­லக்க ஆபத்­து­க­ளைக் கையாளும் திறன்­களை முதி­ய­வர்­க­ளி­டையே வலுப்­ப­டுத்த மற்ற திட்­டங்­களும் நடப்­பில் உள்­ளன என்­றார் அவர். சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு அமைப்­பின் எஸ்ஜி மூத்­தோர் இணையப் ­பா­து­காப்புத் திட்­ட­மும் அவற்­றில் அடங்­கும். இணை­யப் பாது­காப்­புள்ள பழக்­கங்­க­ளைக் கடை­ப்பி­டிக்க முதி­யோ­ருக்கு அத்திட்டம் உத­வுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!