சிங்பாஸ் மோசடியில் ஈடுபட்டதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

சிங்­பாஸ் மோச­டி­யில் சம்­பந்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­படும் 25 வயது மலே­சி­ய­ரான லீ ஜின் ஆன் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

தீவின் பல பகு­தி­க­ளி­லும் குற்­ற­வி­யல் விவ­கா­ரத் துறை­யைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் நடத்­திய சோத­னை­யில் லீயும் 33 வயது ஆட­வர் ஒரு­வ­ரும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கைது செய்­யப்­பட்­ட­னர். அந்த ஆட­வரிடம் இன்­ன­மும் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

சுவா லி ஸியன் என்­ப­வ­ருக்கு வழங்­கப்­பட்ட மின்­னி­லக்க கடன்­பற்று அட்­டை­யைப் பயன்­ப­டுத்தி டிரஸ்ட் பேங்க் வங்­கியை ஏமாற்ற, அலாய்­ஷி­யஸ் என்­ப­வ­ரு­டன் சேர்ந்து லீ சதித்­திட்­டம் தீட்­டி­ய­தாக குற்­றப் பத்­தி­ரி­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டது.

விசா­ர­ணைக்கு உத­வு­வ­தற்­காக லீ நான்கு நாள்­கள் விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­ப­டு­வார். நாளை மறு­தி­னம் அவர் மீண்­டும் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வார். கடந்த வியா­ழக்­கி­ழமை முதல் நேற்று முன்­தி­னம் வரை சிங்­பாஸ் தொடர்­பான மோச­டி­கள் குறித்து தனக்­குப் புகார்­கள் கிடைத்­த­தாக காவல்­துறை நேற்று தெரி­வித்­தது. இந்த மோச­டி­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் $21,000க்கும் அதி­க­மான தொகையை இழந்­த­னர்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் சில­ரது கடன்­பற்று அட்­டை­களில் அவர்­களுக்­குத் தெரி­யா­மல் பரி­வர்த்­த­னை­கள் செய்­யப்­பட்­டன.

பிடி­பட்­ட­வர்­க­ளி­டம் இருந்து $120,000க்கும் அதிக மதிப்­பு­டைய ரொக்­கம், எட்டு கைப்­பே­சி­கள், ஒரு மடிக்­க­ணினி, பல்­வேறு வங்கி அட்டை­கள், 16 சிம் அட்­டை­கள் ஆகி­யவை பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!