கடல்நீர்மட்ட உயர்விலிருந்து கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கும் திட்டம்

சிங்­கப்­பூர் அதன் நில, கடற்­ப­குதி தர­வு­களை ஒருங்­கி­ணைக்க உலகம் முழு­வ­தும் உள்ள நிறு­வனங்­கள், அர­சாங்­கங்­கள், கல்வி­யா­ளர்­கள் ஆகி­யோர் உதவ முடி­யும். உள்­ளூர் அதி­கா­ரி­களும் திறந்த புவி­யி­யல் கூட்­ட­மைப்­பும் நேற்று அறி­வித்த முன்­னோ­டித் திட்­டத்­தின்­கீழ் இது சாத்­தி­ய­மா­கிறது. கட­லோ­ரப் பகு­தி­க­ளை­யும் முக்கிய உள்­கட்­ட­மைப்­பு­க­ளை­யும் நாடு­கள் பாது­காப்­ப­தற்கு இது வழி­வி­டு­கிறது.

உலக வெப்­ப­ம­ய­மா­த­லால் கடல்­நீர்­மட்­டம் உயர்­கிறது. இத­னால், தாழ்­வான பகு­தி­யில் உள்ள சிங்­கப்­பூர் அச்­சு­றுத்­தலை எதிர்­நோக்­கு­கிறது.

சிங்­கப்­பூர் புவி­யி­யல் விழா­வின் தொடக்க நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு நேற்று பேசிய நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர், "பரு­வ­நிலை மாற்­றத்­தால் கடல்­நீர் மட்­டம் இன்­ன­மும் தொடர்ந்து உயர்ந்­தால் இது உட­னடி மிரட்­ட­லா­கும். இது, சிங்­கப்­பூரை எளி­தில் பாதிப்­புக்கு இலக்­கா­கக்­கூ­டிய நிலைக்­குத் தள்­ளி­வி­டும். எனவே, கட­லோ­ரப் பகு­தி­க­ளைப் பாது­காப்­ப­தற்கு திட்­ட­மி­டு­வ­தில் நிலம், கடல் சம்­பந்­தப்­பட்ட தர­வு­களை ஒருங்­கி­ணைப்­பது முக்­கி­யம்," என்று கூறி­னார்.

பொது­வாக நிலம், கடல் தரவு­கள் தனித்­த­னி­யாக சேக­ரிக்­கப்­பட்டு வந்­தன.

இந்த அனைத்­து­லக கூட்­ட­மைப்பு 500க்கும் அதி­க­மான நிறுவனங்கள், அர­சாங்க அமைப்­பு­கள், ஆய்வு அமைப்­பு­கள், பல்கலைக்­க­ழ­கங்­கள் ஆகி­ய­வற்றை ஒன்­று­தி­ரட்­டு­கிறது.

இதற்­கி­டையே, சிங்­கப்­பூ­ரில் புவி­யி­யல் தொழில்­நுட்­பத்தை மேம்­ப­டுத்த நேற்­றைய விழா­வில் உள்­ளூர் அமைப்­பு­கள் திட்­டங்­களை அறி­வித்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!