புதுவகை மோசடிகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை

வரி செலுத்­து­வோ­ரைக் குறி­வைக்­கும் இரு புதிய மோச­டி­கள் வலம் வரு­வது குறித்து சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் பொது­மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­து உள்­ளது.

ஒன்று, செலுத்­தப்­பட்ட வரி­யைத் திருப்­பித் தரு­வ­தா­கக் கூறு­கிறது. மற்­றொன்று, வரு­மா­னத்­தைத் தெரி­யப்­ப­டுத்­தா­த­தும் வரி­ஏய்ப்பு செய்­த­தும் சம்­பந்­தப்­பட்­டது.

Iras-gov.sg எனும் அனுப்­பு­நர் பெய­ரி­லி­ருந்து பொது­மக்­க­ளுக்கு அனுப்­பப்­படும் மோசடி மின்­னஞ்­சல்­களில் உள்ள இணைப்பை சொடுக்கி வரி­யைத் திரும்­பப் பெற்றுக்­கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கிறது.

அந்த இணைப்பு, பய­னா­ளர்­களை ஒன்­றுக்­கும் மேற்­பட்ட இணை­யப் பக்­கங்­க­ளுக்கு இட்டுச்­செல்­கிறது. அவற்­றில் போலி­யான myTax Portal பக்­க­மும் ஒன்று. அதில் பய­னா­ளர்­கள் தங்­க­ளது முழுப் பெயர், தொலை­பேசி எண், அஞ்­சல் குறி­யீடு, கடன்­பற்று அட்டை விவ­ரங்­கள் போன்ற தனிப்­பட்ட விவ­ரங்­களை வழங்க கேட்டுக்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­னர்.

மற்­றொரு வகை மோசடி, குறுஞ்­செய்­தி­கள் மூலம் பொது­மக்­க­ளைக் குறி­வைக்­கிறது. வரு­மா­னத்­தைத் தெரி­யப்­ப­டுத்­த வில்லை என்றும் வரி­ஏய்ப்பு செய்­த­தா­க­வும் கூறி பய­னா­ளர்­களிடம் இருந்து தனிப்­பட்ட விவ­ரங்­களை மோச­டிக்­கா­ரர்­கள் பெற முற்­ப­டு­வர். Mysgtax எனும் அனுப்­பு­ந­ரி­ட­மி­ருந்து வரும் மோசடி குறுஞ்­செய்தி­களில் உள்ள இணைப்பை சொடுக்­கு­மாறு பய­னா­ளர்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கிறது.

மோச­டிக்கு இலக்­கா­வ­தைத் தவிர்க்க, "iras.gov.sg" அல்­லது "go.gov.sg" உள்ள இணைப்­பு­களை மட்­டும் சொடுக்­கு­மாறு பொது­மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­படு­கிறது. வரிப் பரி­வர்த்­த­னை­களைப் பாது­காப்­பாக செய்ய, சிங்­பாஸ் மூலம் myTax Portal தளத்­திற்­குள் நுழைத்து தேவை­யான படி­வங்­களையும் சேவை­களை­யும் பெற்­றுக்­கொள்­ள­லாம் என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!