எரிசக்தி மிச்சப்படுத்தும் திட்டத்தில் மிதிவண்டியும் அடங்கலாம்

மூவறை வீடு­களில் வசிக்­கும் குடும்­பங்­கள், எரி­சக்­தியை மிச்­சப்

­ப­டுத்­தக்­கூ­டிய வீட்டுச் சாத­னங்­களை வாங்­கும்­போது அவற்­றுக்­கான செல­வு­க­ளைக் குறைக்க உத­வும் பற்­றுச்­சீட்­டுத் திட்­டத்­தில் கூடு­தல் அம்­சங்­கள் சேர்க்­கப்­ப­ட­லாம் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சுக்­கான மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் திரு பே யாம் கெங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

பரு­வ­நி­லைக்கு ஏற்­பு­டைய குடும்­பங்­கள் திட்­டத்­தீன்­கீழ் வாங்­கக்­

கூ­டிய பொருள்­க­ள் பட்டியலில் மிதி­வண்­டி­களும் சேர்க்­கப்­ப­ட­லாம் என்­றார் அவர். இத்­திட்­டம் குறித்து தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் பொதுப் பய­னீட்­டுக் கழ­க­மும் இணைந்து மறு­ஆய்வு செய்­

கின்­றன.

மின்­சா­ரச் சாத­னங்­க­ளுக்கு அதிக முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­படும் என்­றார் திரு பே.

மிதி­வண்டி ஓட்­டு­வ­தன் மூலம் கரிம வெளியீடு ஏதும் இல்லை என்­பதை அவர் சுட்­டி­னார்.

கூடு­தல் விவ­ரங்­கள் விரை­வில் அறி­விக்­கப்­படும் என்­றார் அவர். எரி­சக்­தியை மிச்­சப்­ப­டுத்­தும் சாத­னங்­க­ளுக்கு மாறி செல­வு­க­ளைக் குறைக்க குறைந்த வரு­மான குடும்­பங்­களை ஊக்­கு­விக்­கும் வகை­யில் இத்­திட்­டம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­திட்­டம் அடுத்த ஆண்டு டிசம்­பர் மாதம் 31ஆம் தேதி­யன்று நிறை­வ­டை­யும் என்­றார் திரு பே.

 

எரிசக்தியை மிச்சப்படுத்தி செலவைக் குறைக்க குறைந்த வருமான குடும்பங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இத்திட்டத்தைச் செயல்படுத்த பற்றுச்சீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!