வெளிநாட்டு ஊழியர் மரணம்; நிறுவனத்துக்கும் அதன் இயக்குநருக்கும் அபராதம்

கடந்த 2017ஆம் ஆண்டு அப்போது 22 வயதாக இருந்த வெளிநாட்டு ஊழியர் கலியபெருமாள் மணிகண்டன் வேலையிட விபத்தில் உயிர் இழந்தார்.

அவர் மரணத்தில் தொடர்பிருந்ததற்காக அவர் பணியாற்றிய நிறுவனத்துக்கு $250,000ம் நிறுவனத்தின் இயக்குநருக்கு $60,000ம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2017 ஜூன் 6ஆம் தேதி விபத்து நிகழ்ந்தபோது திரு மணிகண்டன் கத்திரி மின்தூக்கி எனப்படும் மின்தளத்தில் இருந்தபடி மின்சாரவேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த மின்தளம் மூன்றாவது மாடியில், அதாவது 7.7 மீட்டர் உயரத்தில், தொங்கிக் கொண்டிருந்தது.

அப்போது ஒரு பாரந்தூக்கி மின்தளத்தில் மோதியதில் திரு மணிகண்டன் கீழே தரைத்தளத்தில் விழுந்தார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழிந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃபியூஷன் பில்டர்ஸ் நிறுவனம் 22 துவாஸ் அவென்யூ 6ஆல் கட்டிக்கொண்டிருந்த தொழியியல் கட்டடத்தில், வேறு நிறுவனத்தைச் சேர்ந்த திரு மணிகண்டன் மின்சாரக் கம்பி இடும் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

அங்குப் பணியாற்றிய மற்ற ஊழியர்கள் குப்பைப் பைகளை கீழே இறக்க பாரந்தூக்கியைப் பயன்படுத்தியபோது விபத்து நிகழ்ந்தது.

பாரந்தூக்கியை ஊழியர்கள் கட்டுப்பாடின்றி பயன்படுத்தி வந்தனர் என்று ஃபியூஷன் பில்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநருக்குப் தெரியும் என்று விசாரணையில் கண்டறியப்பட்டது.

இங் சின் சாங் எனும் அந்த 72 வயது சிங்கப்பூர் ஆடவர் வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரச் சட்டத்தின் ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு $60,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஃபியூஷன் பில்டர்ஸ் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

பாரந்தூக்கியைச் செலுத்த ஓர் ஊழியர் மட்டும் பயிற்சி பெற்றிருந்தார்.

ஆனால் பயிற்சி பெறாத ஊழியர்களும் அதைச் செலுத்தி வந்தனர் என்று திரு இங்குக்குத் தெரியும் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!