சுற்றுச்சூழல், மின்னிலக்க துறைகளில் அதிக வாய்ப்பு

உல­க­ள­வில் பிள­வு­கள் அதி­க­ரிக்­கும்போதி­லும் சிங்­கப்­பூ­ருக்­கும் இந்த வட்­டா­ரத்­திற்­கும் புதிய வளர்ச்சி வாய்ப்­பு­க­ளாக மின்­னி­லக்­க­ம­ய­மும் சுற்­றுச்­சூ­ழ­லும் திகழ்­கின்றன என்று வர்த்­தக, தொழில் இரண்­டாம் அமைச்­சர் டான் சீ லெங் (படம்) தெரி­வித்­துள்­ளார்.

வெளிப்­ப­டை­யான தடை­யற்ற வர்த்­த­கத்­தைச் சார்ந்து இருப்­ப­தும் வட்­டார ஒத்­து­ழைப்­பும் இதர இரண்டு முக்­கிய துறை­கள் என்று டாக்­டர் டான் குறிப்­பிட்­டார்.

இப்­போ­தைய உலக ஒழுங்கு கார­ண­மாக தலை­தூக்­கக்­கூ­டிய வாய்ப்­பு­களை ஆசி­யா­வும் ஆசி­யா­னும் நன்கு பயன்­ப­டுத்­திக்­கொண்டு முழுப் பல­னை­யும் பெற வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்தி கூறி­னார். சிங்­கப்­பூர் அனைத்­து­லக விவ­காரப் பயி­லக ஏற்­பாட்­டில் நேற்று ஆசி­யான்-ஆசியா கருத்­த­ரங்கு நடந்­தது. அதில் டாக்­டர் டான் பேசி­னார்.

வட்­டார வாய்ப்­பு­களும் பிள­வு­பட்­டுள்ள உலக ஒழுங்­கும் என்ற கருப்­பொ­ரு­ளு­டன் நடந்த அந்­தக் கருத்­த­ரங்­கில் உரை­யாற்­றிய இந்­தப் பயி­ல­கத்­தின் தலை­வ­ரான இணைப் பேரா­சி­ரி­யர் சைமன் டே, உலக ஒழுங்­கில் மேலும் பல மாற்­றங்­கள் இடம்­பெற வாய்ப்பு இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

ரஷ்யா-உக்­ரேன் போர், பண­வீக்­கம், பரு­வ­நிலை மாற்­றம் ஆகி­யவை கார­ண­மாக ஏற்­ப­டக்­கூ­டிய பரந்த அள­வி­லான தாக்­கங்­களை அவர் எடுத்­துக்­காட்­டா­கக் குறிப்­பிட்­டார். சவால்­க­ளுக்­கி­டையே வாய்ப்­பு­களும் இருப்­ப­தா­க­வும் அவற்றை நாம் நாடு­வ­தா­க­வும் டாக்­டர் டே கூறி­னார்.

பசு­மைத் திட்­டங்­களில் நிதி முத­லீடு, கரி­மக் குறைப்­புச் சந்தை போன்ற துறை­களில் பொரு­ளி­யல் வளர்ச்­சிக்கு நல்ல வாய்ப்­பு­கள் இருக்­கின்­றன என்று கருத்­த­ரங்­கில் பேசிய மனி­த­வள அமைச்­ச­ரு­மான டாக்­டர் டான் தெரி­வித்­தார்.

கரி­மக் குறைப்பு அனு­கூ­லங்­களைக் கொண்டு நிறு­வ­னங்­களும் நாடு­களும் அவற்­றின் பரு­வ­நிலை இலக்­கு­களை நிறை­வேற்ற முடி­யும் என்­றார் அவர்.

பரு­வ­நிலை மாற்­றத்­தின் பாதக விளை­வு­க­ளைக் குறைக்க உல­க­ள­வில் நட­வ­டிக்­கை­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

இந்­தச் சூழ­லில் நிறு­வ­னங்­களும் அவற்­றின் தயா­ரிப்­பு­க­ளை­யும் சேவை­க­ளை­யும் பரு­வ­நி­லைக்கு அனு­கூ­ல­மான வகை­யில் உருமாற்­றிக் கொண்டு அதன்­மூ­லம் முத­லீட்­டா­ளர்­கள், பய­னீட்­டா­ளர்­க­ள் ஆகியோரின் தேவையை நிறை­வேற்ற வேண்­டும் என்­றார் அவர்.

இவை எல்­லாம் பசுமை நிதித் திட்­டத் துறை­யில் வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தித் தரு­கின்­றன.

இப்­போது அதி­க­ள­வி­லான நிறு­வ­னங்­கள் தங்­க­ளு­டைய பரு­வ­நிலை முயற்­சி­க­ளுக்கு ஆத­ர­வாக பல்­வேறு நிதித் திட்­டங்­கள் குறித்து பரி­சீ­லித்து வரு­கின்­றன என்­பதை டாக்­டர் டான் சுட்­டிக்­காட்­டி­னார்.

"நிறு­வ­னங்­கள் புதிய சந்­தை­களை எட்ட மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் உதவி இருக்­கிறது.

"எல்லை கடந்த வர்த்­த­கத்­தில் பல்­வேறு வாய்ப்­பு­க­ளை­யும் அது வழங்­கி­யி­ருக்­கிறது என்று டாக்­டர் டான் கூறி­னார்.

"ஆசி­யான் நாடு­களும் ஆசிய நாடு­களும் ஒத்­து­ழைத்து வட்­டார ஒருங்­கி­ணைப்பை வலுப்படுத்­த­வேண்­டும்.

"தடை­யற்ற வர்த்­த­கத்­திற்­கான கடப்­பாட்டை அவை நிலை­நாட்ட வேண்­டும்," என்­று டாக்­டர் டான் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

கனடா போன்ற புதிய பங்­கா­ளித்­துவ நாடு­க­ளு­டன் தடை­யற்ற வர்த்­தக உடன்­பாட்­டைச் செய்­து­கொள்ள ஆசி­யான் பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளது.

வர்த்­தக உடன்­பா­டு­கள் ஒரு­பு­றம் இருக்க, வட்­டார அர­சாங்­கங்­களும் நிறு­வ­னங்­களும் மக்­களும் சேர்ந்து செயல்­பட்டு, ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரின் பலத்­தைப் பயன்­ப­டுத்­திக் கொண்டு உல­கப் பொரு­ளி­யல் வாய்ப்­பு­களை கெட்­டி­யா­கப் பிடித்­துக்­கொள்ள வேண்­டும் என்று டாக்­டர் டான் சீ லெங் குறிப்­பிட்­டார்.

தடையற்ற வர்த்தகம், வட்டார ஒருங்கிணைப்புக்கு அமைச்சர் டான் சீ லெங் வலியுறுத்து

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!