நிறுவனத்தின் நற்பெயர்தான் முக்கியம்: தலைமை நிர்வாகி

சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­களில் ஐந்­தில் ஒரு நிறு­வ­னத் தலைமை நிர்­வாகி தமது நிறு­வ­னத்­தின் நற்­பெ­ய­ருக்­குத்­தான் முக்­கி­யத்­து­வம் கொடுக்­கி­றார் என்று தெரிய வந்­துள்­ளது.

பொரு­ளி­யல் நிலைமை, கொவிட்-19 பெருந்­தொற்­றால் விளைந்த நிலை­யற்­ற­தன்மை ஆகி­ய­வற்­றைப் பின்­னுக்­குத் தள்ளி­விட்டு நிறு­வ­னத்­தின் நற்­பெ­ய­ருக்­குத்­தான் தலைமை நிர்­வா­கி­கள் முன்­னு­ரிமை கொடுக்­கி­றார் என்று கேபி­எம்ஜி நிபு­ணத்­துவ சேவை­கள் நிறு­வ­னத்­தின் ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது.

உயர்ந்­து­வ­ரும் வட்டி விகி­தங்­கள், பண­வீக்­கம், பொரு­ளி­யல் மந்­த­நிலை வந்­து­வி­டுமோ என்ற கவலை முத­லிய பொரு­ளி­யல் தொடர்­பான விவ­கா­ரங்­க­ளுக்கு சிங்­கப்­பூர் மற்­றும் உலக அள­வி­லான தலைமை நிர்­வா­கி­கள் இரண்­டாம் நிலை­தான் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.

வளர்ந்து வரும் அல்­லது சீர்­கு­லைக்­கும் தொழில்­நுட்­பம் உலக அள­வி­லான தலைமை நிர்­வா­கி­களின் அக்­க­றைப் பட்­டி­ய­லில் மூன்­றா­வ­தாக இடம்­பெ­று­கிறது.

உள்­ளூர் நிறு­வ­னத் தலைமை நிர்­வா­கி­க­ளின் அக்­க­றைப் பட்­டி­ய­லில், தொற்­று­நோய் மூலம் விளைந்த சோர்வு, வளர்ந்து வரும் அல்­லது சீர்­கு­லைக்­கும் தொழில்­நுட்­பம், ஒழுங்­கு­முறை கவ­லை­கள் ஆகி­யவை மூன்­றாம் நிலை­யைப் பிடித்­தன.

கேபி­எம்ஜி 2022 தலைமை நிர்­வாக அதி­கா­ரி­கள் கண்­ணோட்­டம் எனும் தலைப்­பி­லான இந்த ஆய்­வில் உல­கின் பெரிய நிறு­வ­னங்­க­ளின் 1,300க்கும் மேற்­பட்ட தலைமை நிர்­வா­கி­கள் பங்­கேற்­ற­னர்.

இந்த ஆய்வு கடந்த ஜூலை­யி­லி­ருந்து ஆகஸ்ட் வரை நடத்­தப்­பட்­டது.

"பெருந்­தொற்றை நிர்­வ­கிக்­கும் கால­கட்­டத்­தைத் தாண்டி நிறு­வ­னங்­கள் இப்­போது பொரு­ளி­யல் வளர்ச்சி, வர்த்­தக வாய்ப்­பு­கள் ஆகி­ய­வற்­றின் பக்­கம் தங்­கள் கவ­னத்­தைத் திருப்­பி­யுள்­ள­தால், தலைமை நிர்­வா­கி­கள் தங்­கள் நிறு­வ­னங்­க­ளின் நற்­பெ­ய­ருக்­குக் களங்­கம் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தில் மிகுந்த அக்­கறை காட்டு­கின்­ற­னர்," என்று கேபி­எம்ஜி சிங்­கப்­பூர் நிறு­வ­னத்­தின் நிர்­வா­கப் பங்­காளி ஓங் பாங் தை தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!