கடந்த ஆண்டு பிள்ளைகளைத் திருத்தும் நோக்கில் 40% பெற்றோர் அடித்தனர்

பிள்­ளை­க­ளைத் திருத்­து­வ­தற்­காக 40 விழுக்­காட்­டுப் பெற்­றோர் கடந்த ஆண்டு, அடித்­தல், அறை­தல் போன்ற ஒழுங்­கு­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களை ஒரு­மு­றை­யா­வது மேற்­கொண்­ட­தா­கப் புதிய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

அத்­த­கை­யோ­ரில் ஏறக்­கு­றைய 30 விழுக்­காட்­டி­னர் அடிக்­கடி அவ்­வாறு பிள்­ளை­க­ளைத் தண்­டித்­த­தா­க­வும் ஆய்வு கூறு­கிறது.

ஆய்­வில் 767 பெற்­றோர் கலந்து கொண்­ட­னர். உள­வி­யல்­ரீ­தி­யான ஒழுங்­கு­ப­டுத்­தும் முறை­க­ளைக் கையாண்­ட­தாக ஆய்­வில் கலந்­து­கொண்ட 80 விழுக்­காட்­டி­னர் குறிப்­பிட்­ட­னர்.

ஆய்­வில் பங்­கெ­டுத்த அனை­வருமே உடல்­ரீ­தி­யா­கத் துன்­பு­றுத்­தாத நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­றி­ய­தா­க­வும் தெரி­வித்­த­னர். உரக்­கத் திட்டு­தல், அவ­ம­திக்­கும் சொற்­க­ளைக் கூறு­தல் போன்­றவை உள­வி­யல்­ரீதி­யான நடை­மு­றை­களில் அடங்­கும். எடுத்­துக்­கூ­றிப் புரி­ய­வைத்­தல், திருந்தி நடப்­ப­தற்­காக சிறு பரி­சு­கள் அளித்­தல் போன்­றவை உடல்­ரீ­தி­யான துன்­பு­றுத்­தல் அல்­லாத நட­வ­டிக்­கை­களில் அடங்­கும்.

ஆய்­வின் ஓர் அங்­க­மாக, தாங்­கள் சிறு­வ­ய­தில் எதிர்­கொண்ட ஒழுங்­கு­முறை நட­வ­டிக்­கை­க­ளைப் பற்றி 692 இளை­யர்­க­ளி­டம் கேட்­கப்­பட்­டது. சிங்­கப்­பூர் சிறு­வர் சங்­க­மும் யேல்-என்­யு­எஸ் கல்­லூ­ரி­யும் நடத்திய ஆய்­வில் கலந்­து­கொண்ட பெரும்­பா­லான பெற்­றோர், உடல்­ரீ­தி­யா­கத் துன்­பு­றுத்­தும் தண்­ட­னை­கள் பலன் தர­வில்லை என்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!