கூட்டுரிமை வீடு வாங்கிய பெரும்பாலோர் சீன நாட்டவர்

இந்த ஆண்டு கூட்­டு­ரிமை வீடு­களை வாங்­கிய வெளி­நாட்­டி­ன­ரில் பெரும்­பா­லோர் சீன நாட்­ட­வர்­கள் என்று தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த ஆண்­டின் முதல் எட்டு மாதங்­களில் 932 தனி­யார் வீடு­களை இத்­த­கை­யோர் வாங்­கி­உள்­ள­னர். அவர்­களில் சிலர் இங்கு நிரந்­த­ர­வா­சத் தகுதி பெற்­ற­வர்­கள். இந்த ஆண்டு இது­வரை தனி­யார் வீடு வாங்­கி­யோர் எண்­ணிக்­கை­யில் இது 6.7 விழுக்­காடு.

இரண்­டா­வது நிலை­யில் மலே­சி­யர்­கள் இருப்­ப­தா­க­வும் ஆனா­லும் தனி­யார் கூட்­டு­ரிமை வீடு வாங்­கிய மலே­சி­யர்­க­ளை­வி­ட­வும் சீன நாட்­ட­வ­ரின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட இரு­ம­டங்கு என்­றும் தக­வல்­கள் கூறு­கின்­றன.

ஐந்து மில்­லி­யன் வெள்ளி அல்­லது அதற்­கு­மேல் விலை­யு­டைய ஆடம்­பர கூட்­டு­ரிமை வீடு­களை வாங்­கி­யோர் பட்­டி­ய­லி­லும் சீன நாட்­ட­வர் முன்­னிலை வகிக்­கின்­ற­னர். இத்­த­கைய 81 வீடு­க­ளைச் சீன நாட்­ட­வ­ரும் 34 வீடு­களை அமெ­ரிக்­கர்­களும் 28 வீடு­களை இந்­தோ­னீ­சி­யர்­களும் வாங்­கி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

இங்கு கூட்­டு­ரிமை வீடு­களை வாங்­கும் வெளி­நாட்­டி­னர் எண்­ணிக்கை ஏறக்­கு­றைய கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முன்­பி­ருந்த நிலையை எட்­டி­வ­ரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!