செய்திக்கொத்து

வரும் 20ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் இடம்பெறும்

அடுத்த நாடாளுமன்றக் கூட்டம் இம்மாதம் 20ஆம் தேதி வியாழக்கிழமை இடம்பெறவிருக்கிறது. நாடாளுமன்ற அலுவலர் நேற்று இதனைத் தெரிவித்தார்.

மசே நிதி கணக்கில் தாமாக முன்வந்து நிரப்பும் தொகை 2022ல் புதிய உச்சம்

சிங்கப்பூரர்கள் பலரும் ஓய்வுகாலத்துக்கான சேமிப்பில் கவனம் செலுத்தும் நிலையில், மத்திய சேம நிதிக் கணக்கில் அவர்கள் தாங்களாகவே முன்வந்து நிரப்பும் தொகை இந்த ஆண்டு புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 200,000க்கும் மேற்பட்டோர் இவ்வாறு பணம் நிரப்பியுள்ளனர். இவர்கள் தங்கள் சொந்தக் கணக்கில் அல்லது தங்கள் அன்புக்குரியவர் கணக்கில் இதுவரை 3.5 பில்லியன் வெள்ளிக்குமேலான தொகையை நிரப்பியுள்ளதாக மத்திய சேம நிதிக் கழகம் தெரிவித்தது.

சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் நிரப்பப்பட்ட தொகையைவிட இது 84 மில்லியன் வெள்ளி அதிகம். சென்ற ஆண்டு முழுவதும் மொத்தம் 4.76 பில்லியன் வெள்ளி இவ்வாறு நிரப்பப்பட்டது.

ரொக்கமாக நிரப்பப்படும் தொகைக்கும் மசேநிதியின் சிறப்புக் கணக்கு, ஓய்வுகாலக் கணக்கு ஆகியவற்றுக்கும் ஆண்டுக்கு ஆறு விழுக்காடு வட்டி கிடைக்கும் என்பதாலும் இதில் பணத்தின் பாதுகாப்புக்கு அபாயம் ஏதும் இல்லை என்பதாலும் சிங்கப்பூரர்கள் இவ்வாறு பணம் நிரப்புவதாகக் கழகம் குறிப்பிட்டது.

எம்.பி. லுயிஸ் இங் மீது கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது

ஈராண்டுக்கு முன்பு, உரிய அனுமதியின்றி உணவங்காடிக் கடைக்காரர்களுக்கு ஆதரவாகப் பதாகை ஏந்திய நாடாளுமன்ற உறுப்பினர் லுயிஸ் இங் மீது பொது ஒழுங்குச் சட்டத்தின்கீழ் காவல்துறை கூடுதல் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் நேற்று இவ்வாறு கூறியது.

விசாரணையில், திரு இங் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், கொவிட்-19 கிருமிப்பரவல் நேரத்தில் தமது தொகுதியைச் சேர்ந்த உணவங்காடிக் கடைக்காரர்களின் நலனை விழைந்து தமது அக்கறையை அவ்வாறு வெளிப்படுத்தியது தெரியவந்ததாகத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

திரு இங் பதாகை ஏந்திய சம்பவம், சமூக ஆர்வலர் ஜோலோவன் வாம் 2018ல் அரசு நீதிமன்றத்திற்கு அருகே டெர்ரி சு, டேனியல் டிகோஸ்டா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளைத் திரும்பப்பெறக் கோரி பதாகை ஏந்தியதிலிருந்து மாறுபட்டது என்பதைத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெளிவுபடுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!