தனியார் வீட்டை விற்று மறுவிற்பனை வீடு வாங்குவோர் காத்திருப்பில் நீக்குப்போக்கு

தனி­யார் வீட்டை விற்று வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் மறு­விற்­பனை வீட்டை, அர­சாங்க மானி­யம் இல்­லா­மல் வாங்க விரும்­பு­வோர் தங்­கள் வீட்டை விற்­ற­தில் இருந்து 15 மாதங்­கள் காத்­தி­ருக்­க­வேண்­டும் எனும் நடை­முறை சென்ற மாதம் 30ஆம் தேதி நடப்­புக்கு வந்­தது.

இருப்­பி­னும் இந்த நடை­முறை நடப்­புக்கு வரு­முன்­னரே வீவக மறு­விற்­பனை வீட்டை வாங்க விண்­ணப்­பித்­துள்ள தனி­யார் வீட்டு உரி­மை­யா­ளர்­கள், இந்த 15 மாதக் காத்­தி­ருப்­பி­லி­ருந்து விலக்கு பெற­லாம் என்று கழ­கம் தெரி­வித்­துள்­ளது. இவர்­கள் இதற்­கான ஆவ­ணங்­க­ளைச் சமர்ப்­பிப்­பது கட்­டா­யம்.

இத்­த­கைய விலக்கு பெறு­வ­தற்­காக கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வரை­யில் 450 விண்­ணப்­பங்­கள் பெறப்­பட்­டுள்­ளன. இவற்­றில் கிட்­டத்­தட்ட பாதி, இதற்­குத் தகுதி பெறு­வ­தா­கக் கழ­கம் குறிப்­பிட்­டது.

புதிய நடை­மு­றை­யின்­கீழ் 55 வயது பூர்த்­தி­ய­டைந்­தோ­ருக்கு விலக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது. மற்­ற­வர்­களில் தனி­யார் வீட்டை விற்று­விட்டு வீவக மறு­விற்­பனை வீட்­டுக்கு இன்­னும் விண்­ணப்­பம் செய்­யா­தோர் சிர­மத்தை எதிர்­நோக்­கு­கின்­ற­னர்.

கட்­டா­யக் காத்­தி­ருப்பு காலத்­தி­லி­ருந்து விலக்கு கோரும் விண்­ணப்­பங்­களைக் கவ­ன­மாக ஆய்­வு­செய்து அதன்­பி­றகு முடி­வெ­டுக்­கப்­படும் என்று வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் கூறி­யது.

சில தனி­யார் வீட்டு உரி­மை­யா­ளர்­கள் இந்த 15 மாதக் காத்­தி­ருப்­பால், மறு­விற்­பனை வீட்டை வாங்­கத் தகு­தி­பெ­றாத நிலை ஏற்­ப­ட­லாம். அத்­த­கை­யோ­ரி­டம் வாங்­கிய முன்­ப­ணத்தை மறு­விற்­பனை வீட்டை விற்­பனை செய்­வோர் திருப்­பித்­தர வேண்­டும் என்று கழ­கம் தெரி­வித்­தது.

வீட்­டைத் தாம் வாங்­கு­வதை உறு­தி­செய்­து­கொள்ள ஒரு வெள்ளி முதல் 1,000 வெள்ளி வரை முன்­பணம் செலுத்­தி­னால் அந்­தத் தொகை வீட்டு விலை­யில் கழித்­துக்கொள்­ளப்­படும்; ஒருவேளை வீட்டை அவர் வாங்­கா­விட்­டால் அது திருப்­பித் தரப்­ப­ட­மாட்­டாது. இந்­தத் தொகை செலுத்­தி­ய­தில் இருந்து 21 நாள்­க­ளுக்­குள் வீட்டை வாங்­கு­வ­தற்கு அவர் கழ­கத்­தி­டம் விண்­ணப்பிக்கவேண்டும்.

தனி­யார் வீட்டை விற்று வீவக மறு­விற்­பனை வாங்­கும் போக்கு, சென்ற ஆண்­டிலிருந்து அதி­க­ரித்­து­வ­ரு­வ­தா­கக் கழ­கம் தெரி­வித்­தது.

கடந்த ஐந்து ஆண்­டு­களில், வீவக மறு­விற்­பனை வீடு­களை வாங்­கியோ­ரில் 10 விழுக்­காட்­டி­னர் தனி­யார் வீட்டை விற்­ற­பி­றகு வாங்­கியோர் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ சென்ற செவ்­வாய்க்­கி­ழமை நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

வீவக வீடு­களை வாங்­கும் கட­னுக்­கான வட்டி விகி­தம் அதி­க­ரித்­த­போ­தி­லும் இந்த ஆண்­டின் முதல் ஒன்­பது மாதங்­களில் மறு­விற்­பனை வீடு­க­ளின் விலை 7.8 விழுக்­காடு அதி­க­ரித்த நிலை­யில், 15 மாதக் காத்­தி­ருப்பு காலம் குறித்து அதி­கா­ரி­கள் அறி­வித்­த­னர். அறி­விப்பு வெளி­யான 15 நிமி­டங்­களில் அது நடப்­புக்கு வந்­தது.

அதற்கு முன்­னர், தனி­யார் வீட்டு உரி­மை­யா­ளர் வீவக மறு­விற்­பனை வீட்டை வாங்­கி­ய­தி­லி­ருந்து ஆறு மாதங்­க­ளுக்­குள் தனது தனி­யார் வீட்டை விற்­க­வேண்­டும் என்­பதே நடை­மு­றை­யாக இருந்­தது. 15 மாதக் காத்­தி­ருப்பு காலம் என்­பது தற்­கா­லிக நட­வ­டிக்கை என்­றும் இது­கு­றித்­துப் பின்­னர் மறு­ஆய்வு செய்­யப்­படும் என்­றும் கழ­கம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!